சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்நடைமுறைகள்டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல்

டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல்

இதயம் மற்றும் அதன் வடிகுழாய்கள் பற்றி புரிந்து கொள்ளுதல்.
ஒரு நாளைக்கு 100,000 முறை துடிக்கும் ஒரு ஆரோக்கியமான இதயம், ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை உடல் முழுவதும் அணுப்புகிறது. இதயம், நான்கு அறைகள் கொண்ட ஒரு தசை உறுப்பு ஆகும். இரத்தம், நான்கு இரத்த தடுப்பிதழ்கள் – பெருந்தமனித் தடுப்பிதழ், நுறையீரல் தடுப்பிதழ், ஈரிதல் தடுப்பிதழ், மற்றும் முத்தடுக்கிதழ்களின் உதவியுடன் நான்கு அறைகளுக்கு உந்நப்படுகிறது. ஒரு சராசரி ஆயுட்காலத்தில், இந்த தடுப்பிதழ்கள் இரநூறு கோடி முறைகளுக்கு மேல் திறந்து மூடப்படுகிறது. இதயம், இரத்தம் பாய்வதற்காக உந்தும் பொழுது இந்த இதய தடுப்பிதழ்கள் திறக்கப்படுகின்றன. இரத்தம் பின் நோக்கி பாயாமல் இருக்க, அவை அதி வேகத்தில் இதயத்துடிப்புகளுக்கிடையே மூடப்படுகின்றன. இந்த இயல்பான ஓட்டத்தில் தடை ஏற்பட்டால், இரத்தம் எங்கு தேவைபடுகிறதோ, அங்கு இரத்தத்தை உந்துவது இதயத்தி்ற்கு கடினமாகும். இரத்த ஓட்டம் இதயத்தை விட்டு வெளியேறி மற்ற உடல் பாகங்களுக்கு உந்துவதை பெருந்தமனித் தடுப்பிதழ் கட்டுபடுத்துகிறது.

தடுப்பிதழ் கோளாறுகள்

சில சமயங்களில், இந்த கடினமாக உழைக்கும் தடுப்பிதழ்களில் கோளாறுகள் ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையே அச்சுறுத்தும். துளைச்சுறுக்கம், குறிப்பாக பெருந்தமனி துளைச்சுறுக்கம் என்பது பெருந்தமனித் தடுப்பிதழின் வாய் சுறுங்குவதாகும். இது வயது,மரபணு முன்தீர்மானம், வாத காய்ச்சல்,கதிர்வீச்சு, மற்றும்/அல்லது கால்சியம், கொழுப்பு போன்ற துணுக்குகளின் படிமானத்தாலும் ஏற்படலாம்.இதனால், தடுப்பிதழ் கடினமாகி துணுக்குகள் எளிதில் நகர முடியாமல் அல்லது முழுவதாக திறவாமல் போகலாம்.இது பெருந்தமனித் தடுப்பிதழ் வழியாக இதயம் உங்கள் உடலுக்கு இரத்தத்தை உந்தும் திறனை குறைக்கும். அப்படியே இதை விட்டுவிட்டால், தீவிர பெருந்தமனி துளைச்சுறுக்கம் மாரடைப்பு அல்லது திடீர் இறப்பைக் கூட ஏற்படுத்தும். தடுப்பிதழ்கள் சேதம் அல்லது தோய்ந்து போனால் எதிர்களித்தல் ஏற்பட்டு, இரத்தம் பின்நோக்கி பாயலாம். இது, இரத்தம் பரப்புவதை இதயத்திற்கு கடினமாக்கி,சிகிச்சை அளிக்காமல் போனால்,மாரடைப்பில் முடியலாம்.

பெருந்தமனி துளைச்சுறுக்கத்தின் அறிகுறிகள்

மூச்சு திணறல்
தலைச்சுற்றல் அல்லது மயக்கம்
மார்பு வலி
இளைத்தல் அல்லது சோர்வடைதல்
உங்கள் பாதங்களில் வீக்கம்
பெருந்தமனி துளைச்சுறுக்கத்திற்கான சிகிச்சை
இதயத்தின் பிற நிலைகளை குணப்படுத்த பல மருந்துகள் இருந்தாலும், துரதிட்டவசமாக, பெருந்தமனி துளைச்சுறுக்கத்தை குணப்படுத்த மருந்து இல்லை. தீவிர பெருந்தமனி துளைச்சுறுக்கத்திற்கு உங்கள் மருத்துவர் குறுகிய காலத்திற்கு நீங்கள் நன்றாக உணர மருந்துகளை பரிந்துரைப்பார், ஆனால் இறுதியில் உங்களுக்கு தடுப்பிதழ் இடையீடு அல்லது மாற்று தேவைப்படலாம்.
பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் அறுவைசிகிச்சை
பெருந்தமனி துளைச்சுறுக்க சிகிச்சைக்கு பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் அறுவைசிகிச்சையே பல ஆண்டுகளாக வழக்கமான முறையாக உள்ளது.
இந்த செயல்முறை திறந்த அறுவைசிகிச்சை அல்லது சிறு கீரல் மூலம் குறைந்தபட்ச துளை முறையாளும் செய்யப்படுகிறது.
அறுவை சிகிச்சையின் போது நேயாளியின் சுவாசம் மற்றும் இரத்த ஓட்டம் ஒரு இதய-நுரையீரல் கருவில் மாற்றப்படும்.
அந்த இடத்தை அணுகியவுடன், அறுவை மருத்துவர் நோய்பட்ட தடுப்பிதழை அகற்றிவிட்டு, செயற்க்கை தடுப்பிதழ் அல்லது உயிரியலான தடுப்பிதழ் அல்லது இவை இரண்டின் சேர்க்கையிலான தடுப்பிதழை உள்வைப்பார்.

நீங்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமணையில் இருப்பீர்கள்.

டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல்

டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் றால் என்ன?

டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் என்பது தன் சரியாக சிறக்கும் திறனை இழந்த ஒரு குறுக்கப்பட்ட பெருந்தமனித் தடுப்பிதழை (பெருந்தமனி துளைச்சுறுக்கம்) குறைந்தபட்ச துளை முறை மூலம் மாற்றும் செயல்முறை ஆகும். டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைக்கும் முறையை சில சமயம் டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் உறுப்பு மாற்று அறுவை எனவும் அழைப்பர்.

டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் என்பது இதய உறைகுழாய் உட்புகுத்தல் போன்று மாற்று தடுப்பிதழ் பொருத்தும் செயல்முறையாகும். இந்த செயல்முறைக்கு இதய துடிப்பை நிறுத்தவோ அல்லது நெஞ்சறையை திறக்கவோ தேவையில்லை. இந்த தடுப்பிதழ்கள் உலோக கண்ணி மற்றும் விலங்கு திசுவால் இணைந்து உருவாக்கப்பட்டு மெலிதான கம்பி (வடிகுழாய்) மூலம் உட்புகுத்தி பழய தடுப்பிதழ் மீது விரிவாக்கப்படும். சரியான இடத்தில் பொருத்திய உடனே செயல்பட துவங்கிவிடும்.
பொதுவாக, முதியவர்கள் அதிக அமாயம் இருப்பதன் காரணமாக வழக்கமாக செய்யப்படும் இந்த தடுப்பிதழ் மாற்று அறுவை சிகிச்சையைசெய்ய இயலாது. டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் என்பது குறுக்கப்பட்ட பெருந்தமனித் தடுப்பிதழை பெரிய அறுவை சிகிச்சை இன்றி சிறிய துளை மூலம் சரிசெய்யும் செயல்பாடாகும்.
டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல், குறுக்கப்பட்ட பெருந்தமனித் தடுப்பிதழ் காரணமாக ஏற்படும் அறிகுறிகளில் இருந்து விடுவித்து அறிவை சிகிச்சை செய்ய இயலாதோர் அல்லது அறுவை சிக்கல்கள் உள்ளோர் உயிர் வாழ்வதை மேம்படுத்தும்.

டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் எப்பொழுது பரிந்துறைக்கப்படும்.?

கடுமையான நோய்குறிகள் கொண்ட குறுக்கப்பட்ட பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்று அறுவூ சிகிச்சையில் நீங்கள் இடைநிலை அல்லது அதிகபடியான அபாய சிக்கல்கள் கொண்டவர் என்றால் உங்களுக்கு டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் பரிந்துறைக்கப்படும். நீங்கள் திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவர் என்றாலும் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் பரிந்துறைக்கப்படும்.
உங்களுக்கு ஏற்கனவே பெருந்தமனி தடுப்பிதழ் மாற்றி உயிரியல் திசு கொண்ட தடுப்பிதழ் பொருத்தப்பட்டு, அது செயல்படவில்லை என்றால் , பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் பரிந்துறைக்கப்படும்.

அறுவை சிகிச்சைக்கு முன்னர் என்னென்ன ஆய்வுகள் நடத்தப்படும்?

உங்களுக்கு குறுக்கப்பட்ட பெருந்தமனி இருக்குமென்று உங்கள் மருத்துவர் நினைத்தால், அதை உறுதி செய்ய இதய எதிரொலி வரைபடமும் அறுவை அபாயத்தை புறநிலையாக மதிப்பிட யூரோ மதிப்பெண் கணக்கிடப்படும். II டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் முடிவு செய்யப்பட்ட பிறகு, உடற்கூறியல் சாத்தியகூறுகளை கண்டறிய, தொட் நாளங்கள் வரை ஒரு 320 சிஸ் சி.டி கரோணரி ஆஞ்சியோகிராம் மற்றும் ஆர்டோகிராம் செய்யப்படும்.

டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தலுக்கு தயாராகுதல்.

உங்களுக்கு டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் செயல்முறைக்கு தயாராவதற்காக சில குறிப்பிட்ட அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படும். உங்களின் செயல்முறைக்கு எவ்வாறு தயாராவது மற்றும் செயல்முறையின் போது என்ன நடக்கும் என்பதை சிகிச்சை குழு உங்களுடன் விவாதிப்பர். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதை உங்களின் சிகிச்சை குழுவிடம் விவாதிக்கலாம்.

உங்கள் உடலில் செயல்முறை நடக்கும் இடத்தில் ரோமங்களை சவரம் செய்ய வேண்டும். திட்டமிட்ட செயல்முறைக்கு ஒரு நாள் முன்னரே நீங்கள் மருத்துவமணைக்கு வரவேண்டும் மற்றும் இந்த செயல்முறை மயக்க மருந்து கொடுத்து செய்யப்படும். உங்கள் மருத்துவரிடம் பேச வேண்டியவை.

.செயல்முறைக்கு முன்னர் எப்பொழுது சாப்பா மற்றும் டுதண்ணீர் குடிப்பதை நிறுத்த வேண்டும்.

மருத்துவமனைக்கு நீங்கள் என்ன மருந்துகள் கொண்டு வந்துள்ளீர்கள் மற்றும் சிகிச்சை நாளன்று என்ன மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

ஏதேனும் மருந்தினால் அலர்ஜி அல்லது எதிர் வினை ஏற்படுமென்றால்.

நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்.

டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் என்பது உயிரியல் திசு தடுப்பிதழ் என அழைக்கப்படும் மாடு அல்ல பன்றியின் இதய திசுவினால் ஆன பெருந்தமனி தடுப்பிதழ் கொண்டு பழுதடைந்த உங்கள் பெருந்தமனி தடுப்பிதழை மாற்றுவது ஆகும். சில சந்தர்ப்பங்களில் , ஏற்கனவே வைத்து செயல் இலந்து இருக்கஉம் உயிரியல் திசு தடுப்பிதழை மாற்றுவதற்காக டிரான்ஸ் வடிகுழாய் பெருந்தமனித் தடுப்பிதழ் மாற்றியமைத்தல் மூலம் உயிரியல் திசு தடுப்பிதழ் பொருத்தப்படும்.

சிகிச்சையின் போது என்ன நடக்கும்?

உங்களின் சிகிச்சை குழு உங்களின் இதய செயல்பாடு மற்றும் சீர் துடிப்பை கண்காணிப்பர் மற்றும் இதய செயல்பாட்டில் ளற்படும் மாற்றத்தையும் கவனிப்பர்.
தொடை தமனியில் (இடுப்பில்) ஒரு வடிகுழாயை அமைத்து இதயத்தின் அறைகளுக்கு திசை திருப்பப்படும். ஒரு சுருக்கப்பட்ட திசு இதய தடுப்பிதழ் கலான் வடிகுழாய் மீது வைத்து, பாதிக்கப்பட்ட பெருந்தமனி தடுப்பிதழுக்கு உள்ளே நேராக அமைக்கப்படும்.உங்கள் மருத்துவர் அந்த தடுப்பிதழ் பாதுகாப்பாக அதன் இடத்தில் உள்ளதை உறுதி செ ய்த பிறகு, வடிகுழாயை உங்கள் இரத்த நாளங்களில் இருந்து நீக்குவார்.

இதய மருத்துவர்கள், இமேஜங் வல்லுனர்கள், இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், மற்றும் இதய மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட குழு ஒன்று ஒன்றாக செயல்பட்டு, ஆழ்த்திசுப்படவியல் மற்றும் இதய எதிரொலி வரைபடத்தை பயன்படுத்தி, தடுப்பிதழை நோயாளியின் பழுதடைந்த இதய தடுப்பிதழின் இடத்திற்கு வழிநடத்துவர்.

சிகிச்சைக்கு பின்
பொதுவாக நீங்கள் இரண்டாம் நாள் நடக்கலாம் மற்றும் ஐந்தாம் நாள் வீட்டிற்கு செல்லலாம்.

உங்கள் இதய மருத்துவரின் ஆலோசனைப்படி, அவரை டிஸ்சார்ஜுக்கு பிறகு கண்டிப்பாக சந்திக்கவும். இந்த பின்தொடர் மருத்துவர் சந்திப்பு நாள் நீங்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன் கொடுக்கப்படும்.

இதய செயலிழப்பிற்கான கண்காணிப்பு

இதய செயலிழப்பிற்கான அறிகுறிகளை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் இதய செயல் இழப்பு என்பது இதய தசைகள் சாதாரணவற்றைவிட பலவீனமாக அல்லது கடினமாக ஆவதாகும்.இது உங்களுக்கு பெருந்தமனி துளைச்சுறுக்கம் இருந்தால் நாள்பட படிப்படியாக உருவாகும்..கீழ்கண்ட அறிகுறிகளிள் ஏதேனும் நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அழைக்கவும் அல்லது 1066ஐ அழைக்கவும்.

மூச்சுத்தின்றல் அதிகமாதல்

இருமல் அல்லது சளி

கால்களிள் வீக்கம்

எடை அதிகரித்தல்( ஒரு நாளில் 2-3 பவுன்டுகள் அல்லது ஒரு வாரத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பவுன்டுகள் எடை ஏறுதல்)

மார்பு வலி

மயக்கம்

படபடப்பு

அதிகமான சோர்வு அல்லது சக்தியின்மை
தூக்கமின்மை மற்றும் ஓய்வின்மை
பசியின்மை அல்லது குமட்டல்
சிகிச்சை இடத்தின் கவனிப்பு
முதலில் கைகளை நன்றாக கழுவிய பின் ,அந்த இடத்தை தினமும் கவனமாக பரிசோதிக்கவும்.

பேன்டேஜ் டிரஸ்சிங்கை 24 மணி நேரத்திற்கு மேலாக அந்த இடத்தில் வைக்க கூடாது.

டிஸ்சார்ஜ் ஆன பிறகு, நீங்கள் நனைக்கலாம் மற்றும் அந்த இடத்தை வெறும் சோப் மற்றும் தண்ணீர் வைத்து மெதுவாக துடைக்கலாம்.,ஆனால் குளிக்க கூடாது, தண்ணீரில் ஊரகூடாது, அல்லது சிகிச்சைக்கு பின் இரண்டு வாரங்களுக்கு நீச்சல் கூடாது.

அந்த இடத்தை சுத்தமாகவும் உலர்வாகவும் வைக்கவும்.மருந்திட்ட திரவங்கள், பவுடர்கள் அல்லது களிம்புகள் தடவ கூடாது.

சிகிச்சை இடம் இடுப்பில் இருந்தால்; சில சிராப்புகள் ஏற்படலாம், இவை சாதாரணமாக ஏற்படுபவையே.அறுவை சிகிச்சைக்கு பின் அந்த இடம் தொடுவதற்கு மென்னையாக இருக்கும். மருத்துவர்கள் இடுப்பை தடுப்பிதழ் வைக்க பயன்படுத்தி இருந்தால், ஒரு சிறிய கட்டியை அங்கே நீங்கள் உணரலாம். அவை தானாகவே 4-6 வாரங்களில் கரைந்துவிடும். சிலருக்கு அதிக நாட்களும் ஆகலாம்,.

Telephone Call Icon Call Us Now +91 8069991061 Book Health Check-up Book Appointment

Request A Call Back

Close