சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்நடைமுறைகள்முழு முழங்கால் மாற்று சிகிச்சை

முழு முழங்கால் மாற்று சிகிச்சை

முழு முழங்கால் மாற்று சிகிச்சை

கண்ணோட்டம்

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை என்பது முழங்கால் ஆர்த்ரோபிளாஸ்டி என்றும் அழைக்கப்படுகிறது. இது வலி நிவாரணம் மற்றும் மோசமாக நோயுற்ற முழங்கால் மூட்டுகளின் செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுகிறது. உங்கள் தொடை, ஷின்போன் மற்றும் முழங்காலில் இருந்து சேதமடைந்த எலும்பு மற்றும் குருத்தெலும்புகளை வெட்டி, அதை உலோகக் கலவைகள், உயர் தர பிளாஸ்டிக் மற்றும் பாலிமர்களால் செய்யப்பட்ட ஒரு செயற்கை இணைப்பு (புரோஸ்டீசிஸ்) மூலம் மாற்றுவதுதான் இந்த நடைமுறையாகும்.

ஒரு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் உங்கள் முழங்காலின் இயக்கம், நிலைத்தன்மை மற்றும் வலிமையை மதிப்பிடுகிறார். எக்ஸ்-ரேக்கள் சேதத்தின் அளவை தீர்மானிக்க உதவுகின்றன. பிறகு முழங்கால் மாற்று சிகிச்சை உங்களுக்கு தேவையா என்பதை நிபுணர் தீர்மானிப்பார்.

உங்கள் வயது, எடை, செயல்பாட்டு நிலை, முழங்கால் அளவு மற்றும் வடிவம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உங்கள் மருத்துவர் பல்வேறு முழங்கால் மாற்று புரோஸ்டீசஸ் மற்றும் அறுவை சிகிச்சை நுட்பங்களிலிருந்து தகுதியானதை உங்களுக்கு தேர்வு செய்யலாம்.

ஏன் செய்யப்படுகிறது

ஆர்திரிடிஸ் என்பது மூட்டுகளின் வீக்கம். எலும்புகளின் முனைகளில் உள்ள திசுக்கள் படிப்படியாக சேதம் அடைவதால், மேற்பரப்பில் வெளிப்படும் எலும்புகள், மற்றொரு எலும்போடு இணையும் இடங்களில் உராய்வு ஏற்பட்டு, வழக்கமான எலும்பு இயக்கத்திலுருந்து மாறி, கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. இந்த நிலைக்கு சிகிச்சையளிப்பதற்கும் முழங்காலின் இயல்பான செயல்பாடுகளை மீண்டும் மீட்டு எடுதற்கும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை தான் சிறந்த தீர்வாகும்.

ஆர்திரிடிஸ்ன் வகைகள்:

ஆஸ்டோஆர்திரிடிஸ்
பரம்பரை பரம்பரையாக கீல்வாத பாதிப்பு வரலாறு கொண்ட குடும்பத்திலிருந்து வரும் நபர்களுக்கு 50 வயதிற்குப் பிறகு இது நிகழ்கிறது. முழங்காலின் எலும்புகளின் உராய்வை தடுக்கும் மென்மையான திசுக்கள் படிப்படியாக செயலிழக்கும். பின்னர் எலும்புகள் ஒன்றையொன்று தேய்த்து, முழங்கால் வலி மற்றும் முழங்கால் விறைப்பை ஏற்படுத்துகின்றன.

ருமோடாய்டு ஆர்திரிடிஸ்
இது ஒரு நோயாகும், இதில் மூட்டுகளின் உட்புற சவ்வு தடிமனாகவும் வீக்கமாகவும் இருக்கும். இதன் விளைவாக மூட்டுகளுக்கு உயவூட்டுகின்ற திரவம் அதிகப்படியாக உற்பத்தி ஆகிறது. இந்த நாள்பட்ட அழற்சி, எலும்புகளின் முனைகளை உள்ளடக்கிய திசுவை சேதப்படுத்தும் மற்றும் இறுதியில் திசு, வலி மற்றும் விறைப்பு இழப்பை ஏற்படுத்தும்.

டிராமேட்டிக் ஆர்திரிடிஸ்
இது முழங்கால்களில் ஏற்படும் காயம் காரணமாக ஏற்படலாம். முழங்கால் எலும்பு முறிவு அல்லது முழங்காலின் இணைப்பு திசுக்களின் ஏற்படும் நீர் கசிவு காலப்போக்கில் எலும்புகளின் முனைகளில் உள்ள திசுவை சேதப்படுத்தும், இதனால் முழங்கால் வலி ஏற்பட்டு, முழங்கால் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்ட்டுப்படுத்துகிறது.

நோய்க்கான அறிகுறிகள்

நடைபயிற்சி, படிக்கட்டுகளில் ஏறுதல் மற்றும் நாற்காலிகளில் இருந்து எழுந்திருத்தல் போன்ற அன்றாட நடவடிக்கைகளின்போது மூட்டுகளில் ஏற்படும் கடுமையான வலி.
ஓய்வெடுக்கும்போது கடுமையான வலி.
மருந்து மற்றும் ஓய்வு மூலம் சரியாகத மூட்டு வீக்கம் மற்றும் வீக்கம்.
ஜாயின்ட்கள் உருக்குலைவு.
மூட்டு விறைப்பு அல்லது ஜாயின்ட்களை இயல்பான முறையில் நகர்த்த முடியாமை.

நீங்கள் தயாராகுவது எப்படி

உணவு மற்றும் மருந்துகள்

உங்கள் அறுவை சிகிச்சைக்கு முன்னர் சில மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களை உட்கொள்வதை நிறுத்துமாறு உங்கள் மருத்துவர் அல்லது மயக்க மருந்து நிபுணர் உங்களுக்கு அறிவுறுத்தலாம். உங்கள் அறுவை சிகிச்சை நாளன்று நள்ளிரவுக்குப் பிறகு எதையும் சாப்பிட வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்துவார்கள்.

நீங்கள் நலம்பெற தயாராகுங்கள்

சிகிச்சைக்குக்குப் பிறகு பல வாரங்களுக்கு, நீங்கள் ஊன்றுகோல் அல்லது ஒரு வாக்கரைப் பயன்படுத்த வேண்டியிருக்கலாம், எனவே உங்கள் அறுவை சிகிச்சைக்கு முன்பே அவைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். நீங்கள் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்வதை உறுதிசெய்யும்போது, சமையல், குளியல் மற்றும் சலவை செய்தல் போன்ற அன்றாட பணிகளுக்கு உதவி தேவையா என்பதை முடிவு செய்யுங்கள். நீங்கள் தனியாக வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் அறுவை சிகிச்சை ஊழியர்கள் அல்லது மருத்துவமனை டிஸ்சார்ஜ் திட்டமிடுநர், ஒரு தற்காலிக பராமரிப்பாளரை உங்களுக்கு நியமிக்க பரிந்துரைக்கலாம்.

நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம்

அறுவை சிகிச்சைக்கு முன்பு

முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து தேவைப்படுகிறது. உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்கள் பொது மயக்க மருந்தைப் பயன்படுத்தலாமா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. மருந்து உங்களை மயக்கமடையச் செய்கிறது. இது முதுகெலும்பு மயக்க மருந்து. நீங்கள் விழித்திருப்பீர்கள், ஆனால் இடுப்புக்கு கீழே வலியை உங்களால் உணர முடியாது.

அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய தொற்றுக்களைத் தடுக்க, செயல்முறைக்கு முன்னும் பின்னும், உங்களுக்கு நரம்பு ஆண்டிபயாடிக் வழங்கப்படும். உங்கள் முழங்காலில் உணர்வின்மை ஏற்பட தேவையான மருந்து உங்களுக்கு வழங்கப்படலாம். இந்த உணர்வின்மை சிகிச்சைக்குப் பிறகு படிப்படியாக மறைந்துவிடும்.

அறுவை சிகிச்சையின்போது

உங்கள் முழங்கால் மூட்டு, அனைத்து பகுதிகளும் தெரியுமாறு வளைந்த நிலையில் வைக்கப்படும். 6 முதல் 10 அங்குலங்கள் (15 முதல் 25 சென்டிமீட்டர்) நீளமுள்ள ஒரு கீறலைச் செய்தபின், உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் உங்கள் முழங்கால்களை ஒதுக்கி நகர்த்தி சேதமடைந்த ஜாயின்ட்களை வெட்டி அப்புறப்படுத்துவார்.

ஜாயின்ட்களின் மேற்பரப்புகளைத் சரிசெய்த பிறகு, அறுவைசிகிச்சை மூலம் செயற்கை மூட்டு துண்டுகளை இணைக்கிறார். கீறலை மூடுவதற்கு முன், உங்கள் முழங்காலை வளைத்து சுழற்றி, சரியான செயல்பாட்டை உறுதிப்படுத்தி அதை சோதிக்கிறார்கள். அறுவை சிகிச்சை சுமார் இரண்டு மணி நேரம் நீடிக்கும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு

ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஒரு ரெகவரி அறையில் வைப்பார்கள். பிறகு, நீங்கள் உங்கள் மருத்துவமனை அறைக்கு மாற்றப்படுவீர்கள், அங்கு நீங்கள் இரண்டு நாட்கள் தங்கியிருக்கலாம். உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் வலியைக் கட்டுப்படுத்த உதவும்.

மருத்துவமனையில் தங்கியிருக்கும் போது, உங்கள் கால் மற்றும் கணுக்காலை நகர்த்த ஊக்குவிக்கப்படுவீர்கள், இது உங்கள் கால் தசைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வீக்கம் மற்றும் இரத்த உறைவுகளைத் தடுக்க உதவுகிறது. வீக்கம் மற்றும் இரத்தம் உறைதல் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க உங்களுக்கு பிளட் தின்னர் மற்றும் சப்போர்ட் ஹோஸ் அல்லது கம்பரசன் பூட்ஸ் அணியச் சொல்வார்கள்.

அடிக்கடி சுவாச பயிற்சிகளைச் செய்யச் சொல்வார்கள், அது படிப்படியாக உங்கள் செயல்படும் நிலையின் அளவை அதிகரிக்கலாம்.

அறுவைசிகிச்சைக்கு அடுத்த நாள், உங்கள் புதிய முழங்காலில் எவ்வாறு உடற்பயிற்சி செய்வது என்பதை ஒரு உடல் சிகிச்சை நிபுணர் செய்து காண்பிப்பார். நீங்கள் மருத்துவமனையை விட்டு வெளியேறிய பிறகு, வீட்டிலோ அல்லது ஒரு மையத்திலோ இந்த இயற்பியல் சிகிச்சையைத் தொடருவீர்கள்.

அறிவுறுத்தப்பட்டபடி, உங்கள் பயிற்சிகளை தவறாமல் செய்யுங்கள். விரைவில் நலம் பெற, காயம் பராமரிப்பு, உணவு மற்றும் உடற்பயிற்சி தொடர்பான கவனிப்புக் குழுவின் அனைத்து வழிமுறைகளையும் தவறாது பின்பற்றவும்.

பெரும்பாலான மக்களுக்கு, முழங்காலை மாற்றுதல் என்பது வலியிலிருந்து நிவாரணம், மேம்பட்ட இயக்கம் மற்றும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குகிறது. மேலும் முழங்கால் மாற்று சிகிச்சையின் பலன் 15 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு மூன்று முதல் ஆறு வாரங்களுக்கு பிறகு, நீங்கள் பொதுவாக ஷாப்பிங் மற்றும் லேசான வீட்டு பராமரிப்பு போன்ற பெரும்பாலான அன்றாட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கலாம். ஒரு காரில் உட்கார்ந்துகொள்வதற்காக உங்கள் முழங்காலை வளைக்க முடிந்தால், பிரேக்குகள் மற்றும் ஆக்சிலேட்டர் இயக்க போதுமான தசை கட்டுப்பாடு இருந்தால், மற்றும் நீங்கள் இன்னும் மயக்கம் ஏற்படுத்தும் மருந்துகளை எடுத்துக் கொள்ளாவிட்டால், மூன்று வாரங்களில் வாகனம் ஓட்டுவது சாத்தியமாகும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நடைபயிற்சி, நீச்சல், கோல்ஃப் அல்லது பைக்கிங் போன்ற பல்வேறு சிறு நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபடலாம். ஜாகிங், பனிச்சறுக்கு, டென்னிஸ் மற்றும் அதிக அதிர்வை ஏற்படுத்தும் குதித்தல் சம்பந்தப்பட்ட விளையாட்டுகள் போன்றவற்றை நீங்கள் தவிர்க்க வேண்டும். நீங்கள் எதை செய்யலாம் அல்லது கூடாது என்பது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.

அப்பல்லோ மருத்துவமனைகளில் வழங்கப்படும் முழங்கால் மாற்று சிகிச்சையின் வகைகள்

இந்தியாவிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைகளில் செய்யப்படும் சில முழங்கால் அறுவை சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகள்:

முழங்கால் மாற்று சிகிச்சை
கடுமையான மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு நோயாளிகளுக்கு கடுமையான வலியை ஏற்படுத்தி, வழக்கமான செயல்பாடுகளை கூட கடினமாக்கும் நிலை இருந்தால், அதற்கு முழங்கால் மொத்தமும் மாற்றும் சிகிச்சை சிறந்த தீர்வாகும். இந்த சிகிச்சை மூலம், எலும்பு மற்றும் திசுக்களின் அனைத்து நோயுற்ற பகுதிகளையும் அகற்றி, அவற்றை உலோக மற்றும் உயர் அடர்த்தி கொண்ட பிளாஸ்டிக் கூறுகளால் மாற்றுவதன் மூலம் மூட்டு இயல்பான இயக்கத்தை அனுமதிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிகிறது.

முழங்காலில் ஒரு பகுதியில் மட்டும் சிகிச்சை
ஆர்த்ரடிஸ் நோயாளிகளுக்கு இந்த குறைந்த அளவிலான துளையிடும் செயல்முறை ஒரு நல்ல தெரிவாகும். முழங்காலில் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதி முழங்கால் மட்டும் அகற்றப்பட்டு உலோக உள்வைப்புடன் மாற்றப்படுகிறது.

ஹை திபியல் ஆஸ்டியோடமி
ஆஸ்டியோடொமி என்பது அறுவைசிகிச்சை ஆகும். இது எலும்புகளை வடிவமைத்தல் மற்றும் மூட்டுகளை மாற்றியமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது பொதுவாக இளம் நோயாளிகளுக்கு ஏற்படும் மூட்டுவலிக்கு சிகிச்சையாகப் பயன்படுகிறது, குறிப்பாக மிகவும் ஆழமற்ற மூட்டு சாக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. ஹை திபியல் ஆஸ்டியோடொமியில் திபியாவின் மேல் பகுதி, கால்களை உருவாக்கும் கீழ்பகுதிகள், சரிசெய்யப்படுகிறது, பெரும்பாலும் ஒரு எலும்பின் சிறிய பகுதியை நீக்குவதன் மூலம் இது செய்யப்படுகிறது.

‘ஆர்த்தோகிளைடு மெடிக்கல் நீ’ முறையைப் பயன்படுத்தி குறைந்தபட்சமாக ஊடுருவும் முழங்கால் மாற்று (மீள் மேற்பரப்பு) அறுவை சிகிச்சை (எம் ஐ கே ஆர் எஸ்).

ஆர்த்தோகிளைடு என்பது ஒரு உலோகத்தால் ஆன ஆப்பு வடிவ சாதனம்.இது முழங்காலுக்குள் உள்ள குருத்தெலும்புகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு புதுமையான இன்பிளான்ட் சாதனம் ஆகும். இது முழங்கால் மொத்தமும் மாற்றுவதற்கு பதிலாக நோயாளிகளுக்கு குறைந்த அளவிலான மாற்று ஏற்பாட்டை வழங்குகிறது. இந்த சாதனம் 5 முதல் 7 செ.மீ கீறல் மூலம் முழங்காலில் செருகப்படுகிறது.இது அழுத்தத்தை குறைக்கிறது, சரியான ஜாயின்ட் சீரமைப்பை கொடுக்கிறது. சுமைகளை இன்னும் சமமாக மறுபகிர்வு செய்கிறது மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கிறது. இந்த அறுவை சிகிச்சை சாதாரண வாழ்க்கை முறை செயல்பாடுகளை செய்வபதற்கான குறைந்த விலை மற்றும் எளிதான பாதையை உறுதிப்படுத்துகிறது. மேலும் இது முழங்கால் மூட்டுவலியைச் சமாளிக்க பெரிய அறுவை சிகிச்சை மற்றும் நீண்டகால வருங்காலத்தை பற்றி கவலைப்படும் இளம் நோயாளிகளுக்கு நிச்சயமாக ஒரு நல்ல தீர்வை வழங்குகிறது.

நிலையான முழங்கால் மொத்தமும் மாற்றும் சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, இந்த அறுவை சிகிச்சையின் முக்கிய நன்மைகள், அதன் செலவு குறைவான மற்றும் விரைவான மறுவாழ்வு ஆகியவை ஆகும். இது நோயாளிகள் தங்கள் வழக்கமான மற்றும் வாழ்க்கை முறைக்கு விரைவில் திரும்ப உதவுகிறது. இம்முறை, நோயாளியை இந்தியாவில் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமான தரையில் சம்மணமிட்டு உட்காருதல் போன்றவற்றை செய்ய அனுமதிக்கிறது. ஆனால் இது வழக்கமான முழங்கால் மொத்தமும் மாற்றும் அறுவை சிகிச்சையில் சாத்தியமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக ஆர்த்தோகிளைடு நோயாளிகள் வயதாகும்போது இரண்டாவது முழங்கால் மாற்றீடு தேவைப்படும் வரை முழங்கால் மாற்றுவதை தாமதப்படுத்த அனுமதிக்கிறது.

முழங்கால் மொத்தமும் மாற்றும் சிகிச்சையோடு ஒப்பிடும்போது, இந்த குறைந்தபட்சமாக ஊடுருவும் முழங்கால் மாற்று (மீள் மேற்பரப்பு) அறுவை சிகிச்சையில், 2 அங்குல கீறல் மட்டுமே செய்யப்படுகிறது. மேலும் இயற்கையான எலும்பை வெட்டுவது இல்லை, மூட்டு அப்படியே விடப்படுகிறது, தசையை வெட்டுவதில்லை. எனவே இரத்தப்போக்கு இல்லை, குறைந்த வலி, குறைந்த தொற்று, குறைவான சிக்கல்கள், விரைவாக நலம் பெறல், அதே நாளில் நடக்க முடியும். அறுவை சிகிச்சையை ஒரு நாள் பராமரிப்பு அறுவை சிகிச்சையாக செய்ய முடியும், அதனால் மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை.

நோயாளியின் குறிப்பிட்ட ஜிக்ஸைப் பயன்படுத்தி முழங்கால் மாற்று சிகிச்சை

நோயாளியின் குறிப்பிட்ட ஜிக்ஸைப் பயன்படுத்தி முழங்கால் மாற்று சிகிச்சை என்பது இந்த துறையில் உள்ள ஒரு புதிய அதிநவீன தொழில்நுட்பமாகும். நோயாளியின் முழங்கால் மற்றும் காலின் சி.டி ஸ்கேன் படங்களைப் பயன்படுத்தி ஆளுக்கேற்றவாறு வெட்டும் பகுதிகள் பற்றி முன்னரே முடிவு செய்யப்படுகிறது, பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் முழங்கால் புரோஸ்டெஸிஸ் பிளேஸ்மென்ட்டின் துல்லியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குறைந்த நேரத்தில் அறுவை சிகிச்சை, குறைவான இரத்த இழப்பு, மேம்பட்ட துல்லியம், மேம்பட்ட அறுவை சிகிச்சை விளைவு மற்றும் குறுகிய காலமே மருத்துவமனையில் தங்குவது போன்றவற்றின் மூலம் விரைவாக நலம் பெற உதவுகிறது.

சீர்மையான முழங்கால்

குறைந்தபட்சமாக ஊடுருவும் சப்வாஸ்டஸ் நுட்பம் மற்றும் ஆட்டூன் சுழலும் தளம் முழங்கால் மாற்று சிகிச்சை மூலம் போன்ற சமீபத்திய மேம்பட்ட நுட்பத்தால் வலியற்ற நிலை ஏற்படுகிறது. இதனால் பாரம்பரிய முழங்கால் அறுவை சிகிச்சையின் அனைத்து பக்க விளைவுகளும் நீக்கப்படுகிறது. ஹை-பிளக்சியான் இன்பிளான்ட்களை பயன்படுத்துவதால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளிகள் அவர்கள் பயன்படுத்தும் ஆரோக்கியமான முழங்கால் மூட்டுகளைப் போல முழு நெகிழ்வுத்தன்மையைப் பெறுவதை அப்பல்லோ மருத்துவமனைகள் உறுதி செய்கின்றன. ஆட்டூன் சுழலும் தளம் முழங்கால் மாற்று சிகிச்சை மற்றும் பிற குறைவான சிரமம் அளிக்கும் நடைமுறை சிகிச்சைகளில் இந்தியாவில் அப்பல்லோ மருத்துவமனைகள் ஒரு முன்னோடியாக திகழ்கிறது.

Telephone Call Icon Call Us Now +91 8069991061 Book Health Check-up Book Appointment

Request A Call Back

Close