முழு இடுப்பையும் மாற்றுதல்
இதற்கான செயல்முறை என்ன?
இடுப்பை மாற்றுதல் அல்லது முழு இடுப்பு மூட்டுச் சீரமைப்பு என்பது ஒரு அறுவை சிகிச்சையாகும், இந்த சிகிச்சையில் இடுப்பு மூட்டின் சேதமான குருத்தெலும்பு மற்றும் எலும்பு நீக்கப்பட்டு செயற்கை மூட்டு (செயற்கை உறுப்பு) பொருத்தப்படுகிறது.
இது ஏன் செய்யப்படுகிறது?
உங்கள் இடுப்பு மூட்டு தேய்ந்து போகும் போது அல்லது இது உங்கள் அசைவைப் பாதிக்கும் அளவிற்கு சேதமடைந்தால், நீங்கள் கடுமையான வலியை அனுபவிக்கிறீர்கள், இது மருந்துகள் அல்லது உடல் சிகிச்சை மூலம் குணமடைவதில்லை என்பதனால், உங்கள் மருத்துவர் முழு இடுப்பையும் மாற்றுவதற்கு பரிந்துரைப்பார். கீல்வாதம் தவிர, இடுப்பை மாற்றுவதற்கு மிகவும் பொதுவான காரணங்கள்:
- முடக்கு வாதம்
- இடுப்பு முறிவு
- அழுகல் வாதம்
- அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ்
- வழக்கத்திற்கு மாறான எலும்பு வளர்ச்சி காரணமாக ஏற்படும் கோளாறுகள் (எலும்பு மிகை வளர்ச்சி)
இந்த அறுவை சிகிச்சையின் போது என்ன நடக்கும்?
இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது, உங்கள் இடுப்பின் முன் பகுதியில் அல்லது பக்கவாட்டுப் பகுதியில் உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் ஒரு கீறல் போடுவார். நோயுற்ற அல்லது சேதமடைந்த இடுப்பு மூட்டு நீக்கப்பட்டு செயற்கை மூட்டு பொருத்தப்படும்.
இதற்கு எவ்வளவு நேரமாகும்?
இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு பொதுவாக உங்கள் நிலையைப் பொறுத்து சுமார் 60-90 நிமிடங்கள் எடுக்கும்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும்?
இரத்த உறைவுத் தடுக்கவும் வலியைக் கட்டுப்படுத்தவும் நீங்கள் மருந்துகள் எடுப்பீர்கள். உடல் சிகிச்சை நிபுணர் உங்களுக்கு உடற்பயிற்சிகளை பரிந்துரைப்பார் மற்றும் நடைபயிற்சி சாதனத்தின் மூலம் உங்களுக்கு உதவுவார்.
இந்த அறுவை சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவமனையின் நிபுணத்துவம்
இடுப்பு மூட்டு சீரமைப்பு மற்றும் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்த இந்தியாவின் முதல் மருத்துவமனை அப்பல்லோ மருத்துவமனை ஆகும்.
தொடர்பு கொள்ளவும்
எங்கள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தொடர்பு கொள்ள, இங்கே கிளிக் செய்யவும்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நான் எப்போது வாகனம் ஓட்டலாம்?
அறுவைசி கிச்சை செய்த ஆறு வாரங்களுக்குப் பிறகு நீங்கள் வாகனம் ஓட்ட ஆரம்பிக்கலாம். இருப்பினும், நீங்கள் வலி மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது வாகனம் ஓட்ட அனுமதி கிடையாது. வாகனம் ஓட்ட ஆரம்பிப்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
முழு இடுப்பு மூட்டு மாற்றத்திற்குப் பிறகு செய்யப்படும் மறுவாழ்வு செயல்முறை என்ன?
முழு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உங்கள் உடல் சிகிச்சையை உடனடியாகத் துவங்குவீர்கள். அறுவை சிகிச்சை முடிந்த முதல் நாளில், உங்கள் உடல் சிகிச்சை நிபுணர் சில சிறிய உடல் சிகிச்சையை ஆரம்பிப்பார், நீங்கள் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போதே இந்த சிகிச்சையை செய்யலாம். படிப்படியாக, அடியெடுத்து வைத்தல், நடைபயிற்சி மற்றும் ஏறுதல் ஆகியவை மறுவாழ்வில் செய்யப்படும். வாக்கர் அல்லது ஊன்றுகோல் போன்ற ஆதரவு சாதனங்கள் ஆரம்பத்தில் பயன்படுத்தப்படும். ஓரளவு சிரமம் இயல்பானது. இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உடல் சிகிச்சை மிகவும் முக்கியமானதாகும். சுருக்கங்களைத் தடுத்தல், நோயாளியின் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் கட்டுக் கோப்பான உடற்பயிற்சிகள் மூலம் இடுப்பு மூட்டைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துதல் ஆகியவையே உடல் சிகிச்சையின் நோக்கங்களாகும். உங்களுக்கு வீட்டு உடற்பயிற்சி திட்டங்களும் வழங்கப்படும் மற்றும் கால அட்டவணையின்படி வெளிநோயாளி அடிப்படையிலான உடல் சிகிச்சையில் கலந்து கொள்ள வேண்டியதிருக்கும்.
இடுப்பு மாற்றத்திற்குப் பிறகு நான் தவிர்க்க வேண்டிய செயல்கள் எவை?
குணப்படுத்தும் செயல்முறையில் சுறுசுறுப்பாக இருப்பது அவசியமானதாகும்.
இருப்பினும், அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்க்கவும். மூட்டு விலகுவதைத் தவிர்க்க உங்கள் மருத்துவரிடம் பேசுமாறு உங்களுக்கு பரிந்துரை செய்கிறோம்