சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்நடைமுறைகள்ஆளில்லாத அறுவைசிகிச்சை

ஆளில்லாத அறுவைசிகிச்சை

Da Vinci®-யின் ஆளில்லாத அறுவை சிகிச்சை என்றால் என்ன?


Da Vinci® என்பது ஒரு ஆளில்லாத அறுவை சிகிச்சை முறையாகும். இது, குறைந்தபட்ச ஊடறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு, மேம்பட்ட கருவிகளின் தொகுப்பையும், அறுவை சிகிச்சைத் தளத்தின் ஒரு முப்பரிமாண உயர் வரையறைப் பார்வையையும் பயன்படுத்துகிறது.
இது ஏன் பயன்படுத்தப்படுகிறது?அறுவை சிகிச்சைப் பகுதியின் முப்பரிமாண உயர்-வரையறைப் பார்வையாலும், மேம்பட்ட கருவிகளின் அதிக அளவிலான இயக்கத்தினாலும், ஒரு அல்லது சில சிறிய கீறல்களைக் கொண்டு, சிக்கலான அறுவை சிகிச்சைகளைக்கூட உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் செய்ய முடியும். பின்வரும் நிலைகளுக்கு சிகிச்சை செய்வதற்கு Da Vinci® ஆளில்லா அறுவை சிகிக்சை முறையைப் பயன்படுத்தலாம்:

  • முன்னிற்குஞ்சுரப்பி, நீர்ப்பை மற்றும் சிறுநீரகப் புற்றுநோய்
  • சிறுநீர்க்குழாய்-இடுப்பு சந்திப்பு அடைப்பு
  • பிறவியியல் குறைபாடுகள்
  • நீர்ப்பை-சிறுநீர்க்குழாய் பின்னோக்கி வழிதல் நோய்

மகளிர் நலவியல்

  • பன்மடி நார்த்திசுக்கட்டிகள்
  • கருப்பை மற்றும் கருப்பை வாய் புற்றுநோய்
  • கருப்பை மற்றும் யோனி வீழ்ச்சி
  • இடமகல் கருப்பை அகப்படலம்
  • நீர்ப்பை-யோனி புரை
  • முட்டையகப் பந்து

இதயவியல்

  • ஏட்ரிய இடைச்சுவர் பிழை
  • ஈரிதழ் மற்றும் பெருந்தமனி தடுக்கிதழ் நோய்
  • கரோனரித் தமனி நோய்

இரைப்பை குடல் இயல் மற்றும் ஈரல் இயல்

  • கல்லீரல் நோய்
  • பெருங்குடல் மற்றும் மலக்குடல் சார்ந்த புற்றுநோய்
  • உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள்
  • இரைப்பை புற்றுநோய்
  • உணவுக்குழாய் கோளாறுகள்


ரோபாட் உதவிசெய்யும் அறுவை சிகிச்சை எல்லா நேர்வுகளிலும் குறிப்பிடப்படுவதில்லை. இருக்கக்கூடிய அனைத்து அறுவை சிகிச்சை விருப்பத்தெரிவுகள் மற்றும் அவற்றின் இடர்கள் மற்றும் நன்மைகள் குறித்து எப்போதும் உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
செயல்முறையின்போது என்ன நடக்கிறது?ஒவ்வொரு செயல்முறையும் மாறுபடுகிறபோது, பொதுவாக, இது ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு முனையத்தில் உட்கார்ந்திருக்கும் அறுவை சிகிச்சை நிபுணரை உள்ளடக்கியது. ஒரு மிகச்சிறிய முப்பரிமாண ஒளிப்படக்கருவி மற்றும் அமெரிக்க வெள்ளி நாணய அளவு அறுவை சிகிச்சைக் கருவிகளானது, மிகச்சிறிய கீறல்கள் மூலம் உங்களுக்குள் வைக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சைப் பகுதியின் ஒரு பெரிதாக்கப்பட்ட 360 டிகிரி பார்வையை இந்த ஒளிப்படக்கருவி உங்கள் அறுவை சிகிச்சை நிபுணருக்கு அளிக்கிறது. கட்டுப்பாட்டு முனையத்தின் கை மற்றும் கால் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர், இந்த அறுவை சிகிச்சைக் கருவிகளுடன் இணைக்கப்பட்ட ரோபாட்டிக் ஆயுதங்களை தொலைவிலிருந்து நகர்த்துகிறார். அறுவை சிகிச்சைக் கருவிகள் சரியான இடத்தில் வைக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்கு, அறுவை சிகிச்சை மேஜைக்கு அருகில் மற்றொரு அறுவை சிகிச்சை நிபுணர் நிறுத்தப்படுகிறார்.
இது எவ்வளவு நேரம் எடுக்கும்?Da Vinci® ஆளில்லா அறுவை சிகிச்சை முறையால், அறுவை சிகிச்சையின் கால அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது, அறுவை சிகிச்சை குறித்து உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் உங்களுடன் விரிவாகக் கலந்துரையாடுவார்.
செயல்முறைக்குப் பிறகு என்ன நடக்கிறது?ஆளில்லா அறுவை சிகிச்சைக்குப் பிறகு, காயத்தின் காரணமாக ஏற்படும் வலி குறைவாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். மருத்துவமனையில் உள்ளிருப்பு சிகிச்சை அளித்தலுக்கான கால அளவும் குறைக்கப்படுகிறது. மற்றும் உடலழகைப் பொறுத்தவரையில் அறுவை சிகிச்சையின் கீறல் மிகவும் சிறியதாகும். இந்தக் காரணிகள் அனைத்தின் காரணமாகவும், சிறந்த விளைவுகளுடன் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, உங்கள் சந்திப்பினை புற நோயாளிகள் அடிப்படையில் உங்கள் மருத்துவர் திட்டமிடுவார். சில நேர்வுகளில், உடல் சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம். இந்த செயல்முறையில் அப்பல்லோவின் நிபுணத்துவம்தமிழ்நாட்டில், Da Vinci® ஆளில்லா அறுவை சிகிச்சை முறையினை தொடங்கும் முதல் மருத்துவமனை அப்பல்லோ மருத்துவமனையாகும். ரோபாட்டுகள் மூலமாக அறுவை சிகிச்சை செய்வதற்கு நமது மருத்துவர்கள் சிறப்பாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளார்கள். நமது இற்றைநிலைத் தொழில்நுட்ப அறுவைசிகிச்சை அரங்குகள் Da Vinci® ஆளில்லா அறுவை சிகிச்சை முறையுடன் பொருத்தப்பட்டுள்ளன.
அப்பல்லோ மருத்துவமனை அதனைச் செய்வது குறித்த தகவல்தி அப்பல்லோ இன்ஸ்டிடியூட் ஆஃப் ரோபாட்டிக் சர்ஜரியானது, தற்போது சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகள், கொல்கத்தாவில் உள்ள க்ளிநியாகிள்ஸ் அப்பல்லோ மருத்துவமனைகள், டெல்லியில் உள்ள இந்திரப்ரஸ்தா அப்பல்லோ மருத்துவமனைகள் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ சுகாதார நகரத்தில் உள்ளது.
தொடர்பில் இருங்கள்எங்களது ரோபாட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களை தொடர்புகொள்வதற்கு, இங்கே சொடுக்கவும்.
FAQs (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்)
Da Vinci® அறுவை சிகிச்சை பாதுகாப்பானதா?ஆம், நிச்சயமாக, அறுவை சிகிச்சையை ரோபாட் செய்கிறது என்று மக்கள் நினைப்பதால், ரோபாட்டிக் என்ற சொல் அவர்களை எப்போதும் தவறான பாதையில் கொண்டுசெல்கிறது. அறுவை சிகிச்சையை ரோபாட்டுகள் செய்வதில்லை, ஆனால். ஒரு கட்டுப்பாட்டு முனையத்தின் மூலமாக வழிநடத்தப்படும் Da Vinci®-யின் ஆயுதங்களுடன் இணைக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தி, உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் அதனைச் செய்கிறார்
ஆளில்லா அறுவை சிகிச்சையானது உடல் அகநோக்கியியலைவிட சிறந்ததா?சிறிய கீறல் மற்றும் ஒளிப்படக்கருவியைப் பொறுத்தவரையில், ஆளில்லா அறுவை சிகிச்சையும், உடல் அகநோக்கியியல் அறுவை சிகிச்சையும் ஒன்றாக இருந்தபோதிலும், ஆளில்லா அறுவை சிகிச்சையில் சுழற்றுவதற்கான கருவியின் திறனானது ஒப்பிடுவதற்கு அப்பாற்பட்டது. அடைவதற்கு கடினமான பகுதிகளை அடைவதற்கான திறன் (பாரம்பரிய அணுகுமுறைகளை ஒப்பிடும்போது) உடல் அகநோக்கியியல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக இருந்தபோதிலும், ஆளில்லா அறுவை சிகிச்சையில் அத்திறன் மிக அதிகமாகும். இக்காரணிகள், உடல் அகநோக்கியியல் தொழில்நுட்பத்தைவிட ஆளில்லா அறுவை சிகிச்சையினை மிகவும் உயர்ந்ததாக ஆக்குகிறது.
Da Vinci® அறுவை சிகிச்சையின் மூலம் நான் எவ்வாறு நன்மையடைவேன்?

Da Vinci® அறுவை சிகிச்சையானது பின்வரும் நன்மைகளைக் கொண்டுள்ளது:

  • விரைவாக குணமடைதல்
  • குறைந்த அளவு மருத்துவமனை உள்ளிருப்பு
  • காயம் தொற்றடைவதற்கான குறைந்தபட்ச இடர்
  • அறுவை சிகிச்சையின்போது குறைந்தபட்ச இரத்த இழப்பு
  • குறைந்த அளவே தெரியும் வடுக்கள்
  • நீண்டகால எடை இழப்பு
  • இணை-நோயுற்ற விகிதத்தின் அளவு
  • சிறந்த புற்றுநோய்க் கட்டுப்பாடு
  • ஆரோக்கியமான திசுக்களுக்கு குறைந்த அளவு சேதம்
  • முகமலர்ச்சிக்கு விரைவாக திரும்புதல்
  • பாலியல் செயல்பாட்டுக்கு விரைவாக மீளுதல்


எங்கள் காணொளியைக் காணுங்கள்

காணொளி url: https://www.youtube.com/watch?v=iBLRUcUDz9o

Telephone Call Icon Call Us Now +91 8069991061 Book Health Check-up Book Appointment

Request A Call Back

Close