சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்நடைமுறைகள்குறைந்தபட்ச துளையிடும் இருதய அறுவை சிகிச்சை

குறைந்தபட்ச துளையிடும் இருதய அறுவை சிகிச்சை

குறைந்தபட்ச துளையிடும் இருதய அறுவை சிகிச்சை என்றால் என்ன?

MICS CABG அல்லது MICAS என்பது நுண்துளையிடும் முறையில் செய்யப்படும் இருதய அறுவை சிகிச்சையை குறிக்கிறது. மற்றும் இந்தியாவில் இது போன்ற அறுவை சிகிச்சை புதிய முறையாகும்.   இதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக MICS சிகிச்சை முறை மேம்பட்ட தொழில்நுட்பமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

MICS CABG ஏன் செய்யப்படுகிறது?

தமனி அறுவை சிகிச்சை, வால்வு பழுதுபார்ப்பு மற்றும் மாற்றீடு, குருதி நாள நெளிவு

 பழுது மற்றும் இதை போன்ற பல இருதய சிகிச்சை நடைமுறைகளுக்கு மாற்றாக குறைந்தபட்சமாக துளையிடும் இருதய அறுவை சிகிச்சை பயன்படுத்தப்படலாம். உங்கள் மருத்துவ சிகிச்சை விபரம், தற்போதைய உடல்  நிலை, வயது மற்றும் சோதனை முடிவுகளின் அடிப்படையில், எந்த அறுவை சிகிச்சை உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் தீர்மானிப்பார். பழைய சிகிச்சை முறையுடன் ஒப்பிடும்போது MICS பல நன்மைகளைக் கொண்டுள்ளது:

பாரம்பரிய இதய அறுவை சிகிச்சையைப் போலல்லாமல், இதயம் மார்பின் பக்கங்களில் இருந்து அணுகப்படுகிறது, எனவே மார்பகத்தின் எலும்பு உடைக்கப்படுவது  இல்லை. இது அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலியைக் குறைக்கிறது,

செயல்பாட்டைத் தக்க வைத்துக் கொள்கிறது மற்றும் சுவாசத்தை எளிமையாக்குகிறது. உங்கள் இருதய மருத்துவரின் சரியான ஆலோசனையுடன், உங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி, வாகனம் இயக்குதல்  அல்லது பிற நடவடிக்கைகளை விரைவாகத் தொடங்கலாம்.

இரத்த இழப்பு மற்றும் இரத்த நோய்த்தொற்றுக்கான ஆபத்து குறைவு, எனவே இரத்தமாற்றத்திற்கான தேவையும் குறைவு.

வயதான மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த செயல்முறை, ஏனெனில் இது காயத்தின் மீது நோய்த்தொற்று அல்லது அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நோய்த்தொற்றுக்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

கீறலின் அளவு 2 முதல் 3 அங்குல அளவே இருக்குமாதலால், ​​காயம் வேகமாக குணமடைகிறது. மேலும் அறுவை சிகிச்சை வடு  கண்ணுக்கு புலப்படாது.

வழக்கமான தொழில் நுட்பத்துடன் ஒப்பிடும்போது மருத்துவமனையில் குறுகிய காலம் இருந்தால் போதுமானது. அதாவது 2 – 3 நாட்கள்.

இது ஒரு பாதுகாப்பான மற்றும் திறமையான தொழில் நுட்பமாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இதய அடைப்புகளை  அவற்றின் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் சிகிச்சைக்கு உட்படுத்தலாம்

MICS CABG எவ்வாறு செய்யப்படும்?

குறைந்தபட்சமாக துளையிடும் தமனி அறுவை சிகிச்சை (எம்.ஐ.சி.எஸ்) முறையில், இதயம் இடது மார்பின் பக்கமாக சிறிய 4 செ.மீ கீறல் வழியாக அணுகப்படுகிறது. முலைக்காம்பின் கீழ் நுண் துளையிடப்படுகிறது. எந்த எலும்புகளையும் வெட்டாமல், தசையைப் பிரிப்பதன் மூலம் மார்பு விலா எலும்புகளுக்கு இடையில் இதயம் அணுகப்படுகிறது.

வழக்கமான இதய அறுவை சிகிச்சையைப் போலன்றி, அறுவை சிகிச்சை அனைத்து தமனிகள் அல்லது காலில் இருந்து எடுக்கபட்ட தமனிகள் மற்றும் நரம்புகளை பயன்படுத்தி சிகிச்சை  செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையில் காலில் இருந்து எடுக்கப்படும் நாளம் காலின் மேல் தோலை வெட்டாமல் எண்டோஸ்கோபிகல் முறையில் எடுக்கப்படுகிறது.

இதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?

பொதுவாக அறுவை சிகிச்சை 30 நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும், இருப்பினும் இது தனிப்பட்ட நபர்களை பொறுத்தது. உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சை பற்றி உங்களுடன் விரிவாக விவாதிப்பார்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு என்ன நடக்கும்?

பொதுவாக, நீங்கள் ஐ.சி.யுவில் உயிர் காக்கும் மருந்துகளுடன் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இருப்பீர்கள், மேலும் உங்கள் உடல்நலனை  பொறுத்து நீங்கள் வார்டுக்கு மாற்றப்படுவீர்கள்.

சிகிச்சையில் அப்பல்லோவின்  நிபுணத்துவம்

இந்தியாவில் CABG அல்லது இதய அறுவை சிகிச்சை பரம்பரிய முறையில் மார்பக எலும்பை  வெட்டுவதன் மூலம் செய்யப்படுகிறது. MICAS அல்லது MICS CABG அறுவை சிகிச்சை பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது மற்றும் குறைந்த அளவே துளையிடப்படுகிறது. அப்பல்லோ மருத்துவமனைகள் இந்தியாவில் 400 க்கும் மேற்பட்ட MICSCABG அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளன, மேலும் இதய  அறுவை சிகிச்சை செய்யப்படுவதில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.

மிகவும் மேம்பட்ட கருவி, மேம்பட்ட நுட்பங்கள் மற்றும் திறமையான மருத்துவர்களுடன், அப்பல்லோ மருத்துவமனைகள் இந்த அறுவை சிகிச்சையை மிகவும் பாதுகாப்பாக செய்கின்றன, இது இந்தியாவில் MICS CABG அறுவை சிகிச்சைகளுக்கான சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாகும்.

அப்பல்லோ மருத்துவமனைகள் இதய சிகிச்சையில்  ஒப்பிடமுடியாத பயன்களை கொண்ட அறுவை சிகிச்சைகளின்  முன்னோடியாக இருக்கின்றன. குறைந்தபட்ச ஊடுருவும் கலப்பின மறுசீரமைப்பு செயல்முறை (ரோபோடிக் உதவியுடன் மற்றும் இல்லாமல்), குறைந்தபட்ச ஊடுருவும் இருதய அறுவை சிகிச்சை (எம்.ஐ.சி.எஸ்) நுட்பத்தைப் பயன்படுத்தி பல நாள இருதய துடிப்பு இதய தமனி அறுவை சிகிச்சையை போன்றவற்றை முதன் முதலாக அறிமுகப்படுத்தினோம்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பி‌ன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

கீழ் கண்ட சூழ்நிலைகளில் நீங்கள் மருத்துவமனை அல்லது சிகிச்சையளிக்கும் மருத்துவரை  தொடர்பு கொள்ள வேண்டும் அல்லது 1066 ஐ அழைக்கவும்:

உங்களுக்கு அதிக காய்ச்சல் இருந்தால்

விரைவான இதய துடிப்பு இருந்தால்

உங்கள் மார்புக் காயத்தைச் சுற்றி புதிய அல்லது மோசமான வலி இருந்தால்

உங்கள் மார்புக் காயத்தை சுற்றி சிவத்தல் அல்லது உங்கள் மார்பு காயத்தை சுற்றி இரத்தப்போக்கு இருந்தால்  

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. MICS CABG என்றால் என்ன?

MICS CABG என்பது இருதய அறுவை சிகிச்சையின் மேம்பட்ட நுட்பமாகும், இதில் மார்பின் பக்கத்திலிருந்து (இடதுபுறம்) 2 அங்குலங்கள் கொண்ட ஒரு சிறிய கீறல் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது

2. இது வழக்கமான CABG இலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

வழக்கமான தொழில் நுட்பத்தில், மார்பக எலும்பை  பாதியாகப் பிளந்து செய்யப்படுகிறது . வழக்கமான பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைய 8 வாரங்கள் வரை நீண்ட காலம் தேவைப்படுகிறது. MICS இல் CABG அறுவை சிகிச்சை மார்புச் சுவரின் பக்கவாட்டில் இருந்து செய்யப்படுகிறது, இதில் மார்பு எலும்பு வெட்டப்படுவதில்லை, எனவே விரைவாக  குணமடைய உதவுகிறது. முழு சிகிச்சை முறையும்  பொதுவாக 10 நாட்களில் முடிக்கப்படுகிறது.

3. MICS CABG க்கு குறுகிய காலம் மற்றும் விரைவாக குணமடைய வாய்ப்பு உள்ளதா?

நிச்சயமாக ஆம். மருத்துவமனையில் தங்கியிருப்பது வெறும் 2 – 3 நாட்கள் மற்றும் பெரும்பாலான நோயாளிகள் 10 நாட்களில் முழுமையாக குணமடைவார்கள். அல்லது தங்கள் வேலைக்கு திரும்பி வருகிறார்கள். எனவே, அறுவைசிகிச்சைக்குப் பிறகு நீங்கள் மருத்துவமனையிலிருந்து  விரைவாக  வெளிவந்து , உங்கள் வழக்கமான பணிகளை செய்யலாம். ஆனால் வழக்கமான நுட்பத்தில், குணமடைய நேரம் எடுக்கும்.

4. MICS CABG துடிக்கும் இதய அறுவை சிகிச்சையா?

MICS CABG என்பது துடிக்கும் இதய பலநாள செயல்முறை ஆகும். ஒரு பம்பின் ஆதரவு பெரும்பாலும் தேவையில்லை, ஆனால் துடிக்கும் இதயத்தில் அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது. இதயம் பலவீனமாக இருக்கும்போது மட்டுமே பம்ப் ஆதரவு பயன்படுத்தப்படுகிறது.

5. MICS CABG மற்றும் MIDCAB ஆகியவை ஒன்றா?

இல்லை, அவை ஒன்றல்ல. MIDCAB என்பது ஒரு பழைய நுட்பமாகும், அங்கு ஒன்று அல்லது இரண்டு நாளங்களை மட்டுமே ஒட்ட முடியும். சமீபத்திய நுட்பத்தைப் பற்றி ஒருவரும் அறிந்திருக்கவில்லையாதலால் மக்கள் பெரும்பாலும் நவீன MICS CABG உடன் குழப்பமடைவார்கள்.

6. நான் ஒரு நீரிழிவு நோயாளி. MICS CABG எனக்கு பொருத்தமானதா?

நோய்த்தொற்று விகிதங்களுக்கான  கிட்டத்தட்ட முளுவதும் அகற்றப்படுவதால், உங்களுக்கு MICS CABG பொருத்தமாக இருக்கும். இந்த தொழில் நுட்பத்திற்கு நீங்கள் பொருத்தமானவரா  என்பதை உங்கள் நாளங்களின் தரம் தீர்மானிக்கும், மேலும் உங்கள் அறுவை சிகிச்சை நிபுணரே  அதை தீர்மானிக்க சிறந்தவர்.

7. MICS CABG க்குப் பிறகு தொற்றுநோய்களின் ஆபத்து என்ன?

நோய்த்தொற்றின் ஆபத்து கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகும். நீரிழிவு நோயாளிக்கு கூட MICS CABG இல் அனைத்து நோய்த்தொற்றுகளும் வியத்தகு முறையில் குறைக்கப்படுகின்றன.

8. நான் புகைப்பிடிப்பவன் / ஆஸ்துமா நோயாளி . MICS CABG எனக்கு பொருந்துமா?

ஆம். இது உங்களுக்கு சிறந்த சிகிச்சை முறையாக இருக்கலாம். அந்த முடிவை எடுக்க உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் சுவாச மருத்துவருடன் கலந்து ஆலோசிப்பார்.

9. இதயத்தில் பல அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு MICS CABG பொருந்துமா ?

அல்ல. இதய பல அடைப்பு நோய் அல்லது மிகவும் மோசமான இதய செயல்பாடு கொண்ட நோயாளி இந்த தொழில் நுட்பத்திற்கு பொருத்தமானவராக கருதப்படுவதில்லை. நீங்கள் பொருதமானவரா இல்லையா என்பதை தீர்மானிக்க உங்கள் இதய அறுவை சிகிச்சை நிபுணர் தான் சிறந்த நபர்.

10. அனைத்து மையங்களிலும் MICS CABG செய்யப்படுகிறதா?

இல்லை, அனைத்து இதய அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் MICS செய்ய பயிற்சி அளிக்கப்படவில்லை. எங்களுடையது உட்பட, உலகெங்கிலும் ஒரு சில மையங்கள் மட்டுமே பாதுகாப்பாக MICS ஐச் செய்ய வல்லவை.

11. எண்டோஸ்கோபிக் நரம்பு அறுவடை என்றால் என்ன?

எண்டோஸ்கோபிக் நரம்பு அறுவடை (ஈ.வி.எச்) MICS CABG க்கு நன்மைகளை சேர்க்கிறது. மேம்பட்ட உபகரணங்கள் நோயாளிகளுக்கு  வசதியுடன் தரத்தை உறுதி செய்கிறது. ஈ.வி.எச் என்பது கால் நரம்பை அறுவடை செய்வதற்கான ஒரு நுட்பமாகும், இது எண்டோஸ்கோப்பைக் கொண்டு பைபாஸ் வழித்தடங்களாகப் பயன்படுத்தப்பட உள்ளது.

தொடர்புக்கு

எங்கள் இருதயநோய் மருத்துவர்கள் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் தொடர்பு கொள்ள , இங்கே கிளிக் செய்க

Telephone Call Icon Call Us Now +91 8069991061 Book Health Check-up Book Appointment

Request A Call Back

Close