சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்நடைமுறைகள்கோக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை

கோக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை

இதற்கான செயல்முறை என்ன?

கோக்லியர் கருவி என்பது உட்புற மற்றும் வெளிப்புற பாகங்களைக் கொண்ட ஒரு சிறிய மின்னணு சாதனமாகும். இந்த சாதனமானது ஒலி உணர்வை வழங்க கேட்பதற்கு பொறுப்பான கோக்லியர் நரம்பைத் தூண்டுகிறது. கோக்லியர் கருவியைப் பொருத்தும் அறுவை சிகிச்சையானது நன்றாக கேட்க உங்களுக்கு உதவும். இருப்பினும், இது உங்கள் காது கேட்கும் திறன் இழப்பை சரிபடுத்துவதோ அல்லது குணப்படுத்துவதோ இல்லை.

இது ஏன் செய்யப்படுகிறது?

கோக்லியர் கருவியைப் பொருத்தும் அறுவை சிகிச்சை உங்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்றால், உங்கள் நிலை பின்வருமாறு உள்ளது:

  • நீங்கள் இப்போது உங்கள் இரண்டு காதுகளிலும் காது கேட்கும் திறனை இழந்திருக்கிறீர்கள்
  • காது கேட்கும் கருவி பெரிதும் உதவாது
  • உங்களால் கேட்க முடிகிறது, ஆனால் தெளிவில்லாமல் தான் கேட்க முடிகிறது
  • அறுவை சிகிச்சை ஆபத்தை அதிகரிக்கக்கூடிய வேறு எந்த உடல்நலப் பிரச்சனைகளும் உங்களுக்கு இல்லை

இந்த அறுவை சிகிச்சையின் போது என்ன நடக்கும்?

பொதுவான மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டு கோக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சையின் போது மாஸ்டாய்டு எனப்படும் பொட்டெலும்பைத் திறக்க காதுக்கு பின்னால் ஒரு கீறல் போடப்படுகிறது. கோக்லியாவை அணுகுவதற்கு முக நரம்பைக் கண்டறிந்து, அவற்றுக்கு இடையே ஒரு கீறல் போடப்படுகிறது. கோக்லியா திறந்ததும், உள்வைப்பு மின்முனைகள் அதில் செருகப்படுகின்றன. ரிசீவர் (ஒரு மின்னணு சாதனம்) ஆனது காதுக்கு பின்னால் தோலின் கீழ் வைக்கப்பட்டு கீறல் போடப்பட்ட இடம் மூடப்படுகிறது.

இது ஏன் செய்யப்படுகிறது?

உங்கள் நிலைமையைப் பொறுத்து கோக்லியர் கருவியைப் பொருத்தும் அறுவை சிகிச்சை சுமார் 2-4 மணி நேரம் நீடிக்கும். அறுவை சிகிச்சை பற்றி உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் உங்களுக்கு விரிவாக விளக்கமளிப்பார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்ன நடக்கும்?

உங்களுக்கு வலியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும் மற்றும் நீங்கள் சுகமடைவதன் அடிப்படையில் உங்களை டிஸ்சார்ஜ் செய்வது திட்டமிடப்படும். உங்கள் பின்தொடர்தல் வருகை திட்டமிடப்படும். 4-6 வாரங்களுக்குப் பிறகு, சாதனத்தின் வெளிப்புற பகுதி சேர்க்கப்படும். வெளிப்புற சாதனத்தை பராமரிப்பது மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பேச்சு மொழி சிகிச்சையாளர்கள் மற்றும் ஆடியோலஜிஸ்டுகளைப் பார்வையிடுமாறு உங்களுக்கு பரிந்துரைக்கப்படலாம்.

இந்த அறுவை சிகிச்சையில் அப்பல்லோ மருத்துவமனையின் நிபுணத்துவம்

அப்பல்லோ மருத்துவமனைகளின் நிபுணர்கள் பல குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அவர்களுடைய செவிட்டு குறைபாட்டிற்கு உதவியுள்ளனர். ஹைதராபாத்திலுள்ள அப்பல்லோ மருத்துவமனை 1500 க்கும் அதிகமான கோக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது, இது தெற்காசியாவின் மிகப்பெரிய திட்டமாகும். N7 சாதனத்தைப் பயன்படுத்தி இருபக்கமும் கோக்லியர் கருவியைப் பொருத்துவது  மிகவும் இளம் வயதானவருக்கு டெல்லியிலுள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் செய்யபட்டது.

தொடர்பு கொள்ளவும்

எங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள, இங்கே கிளிக் செய்யவும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இது குழந்தைகளுக்கு பொருத்தமானதா?

ஆமாம், கோக்லியர் பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளும் பயனடையலாம். அவர்கள் பேச்சு மற்றும் மொழித் திறன்களைக் கற்றுக் கொள்ளும் முக்கியமான காலகட்டத்தில் சப்தங்களை கேட்க இது அவர்களுக்கு மேலும் உதவி செய்யும். நீங்கள் எங்கள் நிபுணரை சந்தித்து கலந்தாலோக்கலாம்.

கோக்லியர் கருவியைப் பொருத்தும் அறுவை சிகிச்சை அனைவருக்கும் பொருத்தமானதா?

கோக்லியர் கருவியைப் பொருத்தும் அறுவை சிகிச்சை அனைவருக்கும் சரியான தேர்வாக இருக்காது. கோக்லியர் கருவியைப் பொருத்தும் நிபுணரை நீங்கள் சந்திக்க வேண்டும், அவர்கள் சில கேள்விகள் கேட்பார்கள் மற்றும் பிற நிபுணர்களிடம் (ஆடியோலஜிஸ்ட், பேச்சு-மொழி சிகிச்சையாளர்கள் போன்றவர்கள்) அவர்களுடைய கருத்துக்காக உங்களைப் பரிந்துரை செய்வார்கள். இந்த அறிக்கைகள் அனைத்தின் அடிப்படையில், கோக்லியர் கருவியைப் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு நீங்கள் பொருத்தமானவரா என்பது பற்றி முடிவு எடுக்கப்படும்.

இந்த அறுவை சிகிச்சையால் நான் எவ்வாறு பயனடைவேன்?

  • வாய் அசைவைப் பார்க்காமலே நன்றாக கேட்கும் திறன்
  • தொலைபேசியில் ஒருவர் பேசுவதை நன்றாகக் கேட்க முடியும்
  • பல்வேறு அளவிலான சப்தங்களை வேறுபடுத்துகிறது
  • நன்றாக கேட்பதனால் நன்றாக பேசலாம்

Telephone Call Icon Call Us Now +91 8069991061 Book Health Check-up Book Appointment

Request A Call Back

Close