மருத்துவமனையிலிருந்து வெளியேறுவது என்பது தொடர்ச்சியான கவனிப்புக்காக வீடு திரும்புவது அல்லது மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்படுவதற்காக தற்போது இருக்கும் மருத்துவமனையிலிருந்து நோயாளி வெளியேறும் கட்டம் ஆகும்.
ஒரு நோயாளியை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றுவது நோயாளியின் உடல்நிலை மற்றும் தொடர்ச்சியான செிகிச்சை அல்லது சேவைகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகிறது. நோயாளியின் முதன்மை மருத்துவ ஆலோசகரே அவர் அல்லது அவளுடைய கவனிப்புக்கு பொறுப்பாவார் சென்னை அப்பல்லோ மருத்துவமனைகளால் நிறுவப்பட்ட பரிந்துரை மற்றும் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கான வரன்முறைகள் அல்லது அறிகுறிகளின் அடிப்படையில் நோயாளியின் வெளியேற்றத்திற்கான தயார்நிலையை அவர் தீர்மானிக்கிறார்.
ஒரு நோயாளி மருத்துவமனையிலிருந்து வெளியேற தயாராக இருக்கும்போது நாங்கள் கடுமையான வெளியேற்ற அளவுகோல்களை பின்பற்றுகிறோம். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வெளியேற்றத் திட்டம் துவங்குகிறது, இதில் மருத்துவ நிபுணருக்கான பரிந்துரை, இயன்முறை மருத்துவம், செவிலியர் பராமரிப்பு, அல்லது குடும்பத்தினரால் வீட்டில் ஒருங்கிணைந்து தரப்படும் நோய்த்தடுப்பு மருத்துவ தேவைகள் போன்ற தொடர்ச்சியான தேவைகளுக்கான மதிப்பீடுகள் உள்ளடங்கியுள்ளது.
நோயாளியின் குடும்பம், நோயாளி மற்றும் அவர் அல்லது அவளது தேவைகளுக்கு ஏற்றவாறு வெளியேற்ற திட்டமிடல் செயல்பாட்டில் சேர்க்கப்படுகிறது. நோயாளியை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றுவது அல்லது மேற்கொண்டு மருத்துவப் பரிந்துரை செய்வதில் அவர்களுடைய போக்குவரத்து தேவைகளை புரிந்துகொள்ளுவது மற்றும் வீட்டிற்கு அல்லது மற்றொரு மருத்துவமனைக்கு பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வது ஆகியவை அடங்கும். குறிப்பாக உதவி தேவைப்படும் நோயாளிகளின் போக்குவரத்துத் தேவைகளை மதிப்பிடுவது முககியமானதாகும்.
ஒரு நோயாளி எப்போது மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுவார்?
நிறுவப்பட்ட வெளியேற்ற வரைமுறைகளை உங்கள் உடல்நலம் எதிர்கொள்ளும்போது மருத்துவமனை உங்களை வெளியேற்றும். ஆனால் இதற்கு நீங்கள் முழுவதுமாக குணமாகிவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. இன்னமும் கவனிப்பும் அக்கறையும் தேவைப்படும் ஒரு மருத்துவ நிலையில் நீங்கள் இருக்கலாம். நோயாளியின் உடல்நலம் மேம்பட்டு, மேலும் மேற்கொண்டு உயர்நிலை மருத்துவ கவனிப்பு தேவையில்லை எனும்போது நோயாளியை வெளியேற்றுவதற்காக திட்டமிடப்படுகிறது.
மருத்துவமனையிலிருந்து வெளியேறுவதற்கு நான் எப்படி தயாராக வேண்டும்?
நீங்கள் வெளியேறும் செயல்முறையை தொடங்குவதற்கு முன் உங்கள் எல்லா கேள்விகளையும் ஒரு பட்டிலாக தயார் செய்யுங்கள். உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டதா என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள். இந்த செயல்முறையின் போது உங்கக்கு ஆங்கிலம் புரியவில்லை என்றால், நீங்கள் எப்பொழுது வேண்டுானாலும் ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது மொழி நடுவர் வேண்டுமென்று கேட்கலாம். நீங்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் செயல்முறையின் போது உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் உடனிருக்கலாம். அப்பல்லோ மருத்துவமனை எப்பொழுதும் மருத்துவமனையில் நீங்கள் தங்கியிருந்ததைப் பற்றிய கண்ணோட்டத்தை கொண்ட ஒரு விரிவான சாராம்சத்தை வழங்குகிறது.
மருத்துவமனை வெளியேற்றத்தின் போது என்ன நடக்கும்?
வெளியேற்ற செயல்முறையின் போது நிலைமாற்றத்தை வெற்றிகரமாக செய்ய உங்களுக்குத் தேவையான தகவல்களை மருத்துவமனை ஊழியர் வழங்குவார். இந்த அணி பின்வரும் விஷயங்களை உங்களுடன் விவாதிக்கும்:
- வெளியேற்ற நேரத்தின் போது மருத்துவநிலை
- உங்களுக்குத் தேவையான பின்தொடர்ந்த கவனிப்பு
- நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் (மருந்துகள் எடுக்க வேண்டிய காரணங்கள், எப்போது அதை எடுக்க வேண்டும், எப்படி அதை எடுக்க வேண்டும், கண்காணிக்க வேண்டிய சாத்தியமுள்ள பக்க விளைவுகள்)
- உங்களுக்குத் தேவையான மருத்துவ சாதனம் மற்றும் அதை எப்படி வாங்குவது
- எப்போது மற்றும் எப்படி நீங்கள் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை பெறுவீர்கள்
- உணவு மற்றும் பானங்கள், உடற்பயிற்சி மற்றும் பழக்கவழக்கங்களில் தவிர்க்க வேண்டியதை பற்றிய வழிகாட்டுதல்கள்
- உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சனை இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்
- எப்போது அழைக்க வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்கள்
- தேவையான பின்தொடர் முன்பதிவுகளின் நாட்கள் மற்றும் நேரம் அல்லது முன்பதிவு எப்படி செய்ய வேண்டும்
ஒருவேளை வெளியேற்றும் செயல்முறையில் இவற்றில் ஏதேனும் சேர்க்கப்படவில்லை என்றால் நீங்கள் எப்பொழுதும் கேட்கலாம். உங்கள் எல்லா கேள்விகள் மற்றும் விசாரணைகளுக்கு பதில் பெற வேண்டியது முக்கியமானதாகும்.
மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு என்ன நடக்கும்?