சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images

மருந்து ஒவ்வாமை

மருந்து ஒவ்வாமை

மருத்துவரின் ஆலோசனைக்கு பதிவு செய்யவும்   

 

ஆன்லைனில் மருத்துவரை அணுகவும்

 

மருந்து ஒவ்வாமை – ஒரு கண்ணோட்டம்

 

மருந்து ஒவ்வாமை என்பது ஒரு மருந்துக்கு உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் காட்டும் அசாதாரண எதிர்வினை ஆகும். கடையில் கிடைக்கும் மருந்துகள், மூலிகை மருந்துகள் அல்லது வேறு ஏதேனும் மருந்துகள் போன்ற எந்த வகையான மருந்துகளும் மருந்து ஒவ்வாமையை ஏற்படுத்தும். மருந்து ஒவ்வாமை என்பது பக்க விளைவுகள் அல்லது அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் அளவு போன்றது அல்ல. இருப்பினும் இது மிகவும் தீவிரமானது மற்றும் சில சமயங்களில் அனாபிலாக்ஸிஸ் என்ற உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட ஏற்படலாம், இது உடலின் செயல்பாட்டை மோசமாக பாதிக்கிறது.

 

மருந்து ஒவ்வாமையின் அறிகுறிகள்

 

ஒரு குறிப்பிட்ட மருந்துடன் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், அதை உட்கொண்ட ஒரு மணி நேரத்திற்குள் அதன் விளைவை உணர ஆரம்பிக்கலாம். மருந்து ஒவ்வாமையின் மிகவும் பொதுவான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

 

 

  • தோல் வெடிப்பு

 

  • அரிப்பு

 

  • வீக்கம்

 

  • மூச்சு திணறல்

 

  • காய்ச்சல்

 

  • மூச்சு இழுப்பு 

 

  • அரிப்பு, நீர் வழிந்த கண்கள்

 

  • மூக்கு ஒழுகுதல்

 

அனாபிலாக்ஸிஸ்: முன்னர் குறிப்பிட்டபடி, அனாபிலாக்ஸிஸ் என்பது உயிருக்கு ஆபத்தான நிலையாகும், இது ஏதேனும் ஒரு மருந்துக்கு ஒவ்வாமை எதிர்வினை இருந்தால் அப்போது ஏற்படலாம். அதன் அடையாளங்களும் அறிகுறிகளும் பின்வருமாறு அடங்கும்:

 

  • குமட்டல் அல்லது வயிற்றுப் பிடிப்புகள்

 

  • மூச்சுக்குழாய் மற்றும் தொண்டை இறுக்கமடைந்து, சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது

 

  • வாந்தி

 

  • வயிற்றுப்போக்கு

 

  • தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி

 

  • இரத்த அழுத்தம் குறைதல்

 

  • உணர்வு இழப்பு

 

  • வலிப்பு

 

  • பலவீனமான, விரைவான துடிப்பு

 

மருந்து ஒவ்வாமையின் ஆபத்து காரணிகள்

 

நீங்கள் பின்வரும் சந்தர்ப்பங்களில் மருந்து ஒவ்வாமைக்கான அபாயத்தில் இருக்கலாம்:

 

  • உணவு ஒவ்வாமை அல்லது தூசியால் வரும் சளிக்காய்ச்சல் போன்ற பிற ஒவ்வாமைகளின் வரலாற்றைக் கொண்டிருந்தால்

 

  • பிற மருந்துக்கு ஒவ்வாமை எதிர்வினை இருந்தால்

 

  • மருந்து ஒவ்வாமைக்கான குடும்ப வரலாற்றைக் கொண்டிருந்தால்

 

  • எச்.ஐ.வி தொற்று அல்லது எப்ஸ்டீன்-பார் வைரஸ் போன்ற ஒவ்வாமை மருந்து எதிர்வினைகளுடன் பொதுவாக தொடர்புடைய சில நோய்கள் இருந்தால்

 

  • அதிக அளவு, திரும்பத் திரும்பப் பயன்படுத்துதல் அல்லது நீடித்த பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக, ஒரு மருந்துக்கு அதிக வெளிப்பாடு உள்ளது

 

மருந்து ஒவ்வாமையைக் கண்டறிதல்

 

உங்களுக்கு மருந்து ஒவ்வாமை உள்ளதா என்பதை உறுதி செய்வதற்காக, உங்கள் மருத்துவர் உடல் பரிசோதனை செய்து, அறிகுறிகளின் ஆரம்பம், நீங்கள் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் மருந்துகள் போன்ற விவரங்கள் உட்பட பல கேள்விகளைக் கேட்பார். இதன் அடிப்படையில், அவர் பின்வரும் சோதனைகள் மற்றும் சரியான சிகிச்சையை வழங்கும் முறையை பரிந்துரைப்பார்: அவர் மேலும் பரிந்துரைக்கக்கூடியது பின்வருமாறு:

 

  • தோல் பரிசோதனைகள்

 

  • இரத்த பரிசோதனைகள்

 

மருந்து ஒவ்வாமைக்கான சிகிச்சை

 

மருந்து ஒவ்வாமைக்கான சிகிச்சையின் குறிக்கோள்கள், முதலில் தற்போதைய அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கான வழியைக் கண்டறிவதும், ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டால், இரண்டாவதாக ஒவ்வாமை எதிர்வினையை சரிசெய்வதும் ஆகும். அதற்கேற்ப பின்வரும் மருந்து/சிகிச்சையை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்:

 

  • மருந்தை திரும்பப் பெறுதல்

 

  • ஆண்டிஹிஸ்டமின்கள்

 

  • கார்டிகோஸ்டீராய்டுகள்

 

  • மருத்துவ அவசரநிலையான அனாபிலாக்ஸிஸிற்கான சிகிச்சை

 

Telephone Call Icon Call Us Now +91 8069991061 Book Health Check-up Book Appointment

Request A Call Back

Close