அப்பல்லோ நரம்பியல் இன்ஸ்டிடியூட் ஆனது புதுமை மற்றும் தனிச்சிறப்புடன் இந்தியாவின் சிறந்த நரம்பியல் மற்றும் நரம்பு சார்ந்த அறுவை சிகிச்சை மருத்துவமனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
|
சமீபத்திய நரம்பியல் கதிரியக்க சேவைகள், நரம்பியல் தீவிர சிகிச்சை வசதிகள் மற்றும் மருத்துவ மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் சேவைகள் ஆகியவற்றின் உதவியுடன், அப்பல்லோ மருத்துவமனைகளின் நரம்பியல் நிபுணர்கள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உலகெங்கிலுமுள்ள முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பிடக்கூடிய நரம்பியல் நோய்க்கும் சிகிச்சைகளும் நல்ல முடிவுகளைப் பெற்றுள்ளனர்.
|
அப்பல்லோ நரம்பியல் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர்கள் நோயாளியின் மிகவும் சிக்கலான நரம்பு சார்ந்த நோய்கள் மற்றும் நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் கண்காணிப்பின் அடிப்படையில் சிகிச்சையளிப்பதற்கும் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பெற்றுள்ளனர்.
|
மூளைக் காயம், முதுகெலும்பு மற்றும் நரம்புகள் தொடர்பான அறுவை சிகிச்சையின் ஒரு பிரிவான நரம்பியல் அறுவை சிகிச்சையானது அப்பல்லோ மருத்துவமனைகளில் ஒரு சிறப்பு வசதியாகும். இந்தியாவிலுள்ள அப்பல்லோ மருத்துவமனைகளின் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையானது பக்கவாதம், தலைவலி, கால்-கை வலிப்பு, சுயநினைவை இழத்தல், சிறுநீரக நோய், மரப்பு, தசை நோய், பார்கின்சன் நோய், தசைக் களைப்பு மற்றும் பல நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க நன்கு வசதி செய்யப்பட்டுள்ளது, இது இந்தியாவில் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான மருத்துவமனைகளில் ஒன்றாக நமது மருத்துவமனையை நிலைநிறுத்தியுள்ளது.
|
அப்பல்லோ நரம்பியல் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூளை நோய்கள் அல்லது மூளைக் காயம், தலையில் காயம், முதுகெலும்பு காயம், மூளைக் கட்டிகள், முதுகெலும்பு கட்டிகள், மூளை இரத்தக்கசிவு, மூளை நீர்க்கோவை, நரம்பு காயங்கள், கட்டிகள், தட்டுப்பிதுக்கம் அல்லது குடலிறக்கம், முதுகெலும்பு விலகுதல், உறுதியற்ற முதுகெலும்பு, அட்லாண்டோ அச்சு விலகுதல், முதுகெலும்பு இணைவின்மை போன்ற பிறவி குறைபாடுகள் முதலிய நரம்பியல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கின்றனர். அப்பல்லோ மருத்துவமனைகளின் கூடுதல் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளில் வலிப்பு நோய்கள் அல்லது கால்-கை வலிப்புகளுக்கான சிகிச்சையும் பார்கின்சன் நோய் போன்ற உடல் அசைவு கோளாறுகளுக்கான நவீன சிகிச்சைகளும் அடங்கும். அப்பல்லோ மருத்துவமனை ஒவ்வொரு வருடமும் 1000 க்கும் அதிகமான நரம்பியல் அறுவை சிகிச்சைகளை செய்கிறது.
|
இந்தியாவிலுள்ள சில சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தலைமையிலான குழுவைக் கொண்ட அப்பல்லோ மருத்துவமனைகளில், அனைத்து செயல்பாடுகளையும் பாதுகாத்தல், நல்ல அழகுசாதன பலன், குறுகிய காலமே மருத்துவமனையில் தங்கியிருத்தல் மற்றும் வலியையும் சிரமத்தையும் தவிர்த்தல் ஆகியவை நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் மயக்க மருந்து நிபுணர்கள், நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் ஆகியோர்களின் ஒருங்கிணைந்த குழுவானது மறுவாழ்வு நிபுணர்களுடன் இணைந்து இந்த இலக்கை அடைய அர்ப்பணம் செய்துள்ளது.
|
இன்று, நரம்பியல் மயக்க மருந்து, நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான தீவிர சிகிச்சை மற்றும் நரம்பியல் படமெடுக்கும் தொழில்நுட்பம் ஆகியவை மிகவும் நவீனமடைந்துள்ளன, இதனால் இறப்பு கணிசமாகக் குறைந்துள்ளது மற்றும் செயல்பாட்டு முடிவுகள் மாபெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளன. சிறிதளவே துளையிடப்படும் அறுவை சிகிச்சை நுட்பங்கள் அறுவை சிகிச்சை தொடர்பான மரண விகிதத்தையும் நோயுற்ற விகிதத்தையும் குறைக்க உதவுகின்றன.
|
நரம்பியல் அறுவை சிகிச்சை சாதனை
|
- லாக்னோவிலுள்ள அப்பல்லோமெடிக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைதான் மூளை இரத்த நாள சுருக்கத்தினால் பாதிக்கப்பட்ட 35 வயதான நோயாளிக்கு இதயத் துடிப்பை 4 முறை 45 விநாடிகளுக்கு நிறுத்தி வைத்து மூளை அறுவை சிகிச்சை செய்த முதல் மருத்துவமனையாகும்.
- மைசூரில் முதல்முறையாக, பக்கவாத நோயாளிகளுக்கான எண்டோவாஸ்குலர் சிகிச்சையானது மைசூர் அப்பல்லோ பி.ஜி.எஸ் மருத்துவமனையில் செய்யப்பட்டது
- உடல் அசைவு கோளாறுகளுக்கான தென்னிந்தியாவின் முதல் முழு வீச்சாக செயல்படும், நவீன மையமானது சென்னை அப்பல்லோ மருத்துவமனைகளால் துவங்கப்பட்டுள்ளது.
- ஆழமான மூளை தூண்டுதலை (DBS) மீண்டும் செய்தல் – முதிர்ச்சியடைந்த பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு நோயாளிக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு DBS செய்து செயல்படாத பாகங்கள் காணப்பட்டன. அப்பல்லோ மருத்துவமனை தான் அவருக்கு வெற்றிகரமாக DBS அறுவை சிகிச்சையை நல்ல முடிவுகளுடன் மீண்டும் செய்த முதல் மருத்துவமனையாகும்.
அப்பல்லோ நரம்பியல் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிக்கலான சகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தனி நிறுவனத்தைப் போல தடையின்றி ஒத்துழைக்கின்றனர். நோயாளிக்கு சிறந்த நோயறிதல் மற்றும் சிறந்த சிகிச்சையளிப்பதே நோக்கமாகும். பக்கவாதம், தலை மற்றும் முதுகெலும்பு காயங்கள், மூளைக் கட்டிகள், வலிப்பு நோய்கள், உடல் அசைவுக் கோளாறுகள் மற்றும் தலைவலி போன்றவற்றுக்கு சிறப்பு சிகிச்சையளிப்பதில் நாங்கள் புகழ்பெற்றிருக்கிறோம்.
கால்–கை வலிப்புக்கு சிகிச்சையளித்தல்
|
மூளை மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை
|
நுண் நரம்பியல் அறுவை சிகிச்சை
|
சிக்கலான முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் மற்றும் குறைந்தபட்ச அணுகல் முதுகெலும்பு அறுவை சிகிச்சை
|
முதுகெலும்பு கட்டிகளுக்கான அறுவை சிகிச்சை
|
கடுமையான தலைக் காயம் மற்றும் முதுகெலும்புக் காயங்களுக்கான அறுவை சிகிச்சை
|
நரம்பியல் ஊடுருவல்
|
பக்கவாதம்/ பக்கவாத தடுப்புக்கான அறுவை சிகிச்சை
|
மண்டை ஓடு சார்ந்த அறுவை சிகிச்சை
|
பார்கின்சன் நோய்க்கான அறுவை சிகிச்சை
|
பிட்யூட்டரி கட்டிகள் மற்றும் CSF கசிவுகளுக்கான நரம்பியல் எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை
|
இரத்த நாளம் சுருங்குதல் மற்றும் இரத்தநாள குறைபாடுகளுக்கான எண்டோவாஸ்குலர் காயிலிங்
|
குழந்தை நரம்பியல் அறுவை சிகிச்சை
|
வெர்டிபுரோபிளாஸ்டி
|
ஸ்டீரியோடாக்டிக் கதிரியக்க அறுவை சிகிச்சை
|
ஸ்டீரியோடாக்டிக் திசு சோதனை/ உறிஞ்சி நீக்குதல் |
சைபர்கத்தி
|
நரம்பியல் கதிரியக்க சேவைகள்
|
ரோபோடிக் நரம்பியல் மறுவாழ்வு
|
ஒருங்கிணைந்த நரம்பியல் உடலியல் ஆய்வகம்
|
நரம்பியல் தீவிர சிகிச்சை
|