Verified By Apollo General Physician March 30, 2023
14202இரத்த ஹீமோகுளோபின் சோதனை என்றால் என்ன?
ஹீமோகுளோபின் என்பது உங்கள் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் காணப்படும் ஒரு புரதச்சத்து ஆகும். இந்த ஹீமோகுளோபின் புரதச் சத்தானது உங்கள் உடல் திசுக்களுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்வதோடு உடல் தசைகளிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துச் செல்கிறது. இரத்த ஹீமோகுளோபின் சோதனை என்பது வழக்கமாக உங்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவைக் கண்டுபிடிப்பதற்காகச் செய்யப்படுகிறது.
ஹீமோகுளோபினின் அளவு குறைவாக இருந்தால், உங்கள் இரத்த சிவப்பணுக்களின் அளவு சராசரி அளவைவிடக் குறைவாக இருப்பதற்கான சாத்தியமுண்டு. இந்நிலையை இரத்தச்சோகை என்று அழைக்கப்படுகிறது. உங்கள் ஹீமோகுளோபினின் அளவு அதிகமாக இருந்தால், அது பல காரணங்களால் ஏற்படலாம்.
ஹீமோகுளோபின் சோதனையின் நோக்கம் என்ன?
ஒரு நோயாளியின் ஹீமோகுளோபின் சோதனை, அவர் உடல் நிலையைக் குறித்த பல விஷயங்களை வெளிப்படுத்துகிறது.
இரும்புச் சத்துக்கும் இரத்த சிவப்பணுக்களுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
மனித உடலில் நடக்கும் இரத்த உற்பத்திக்கு இரும்புச் சத்து மிகவும் அவசியமாகும்.
ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் இரும்புச்சத்து நிறைந்த புரதச்சத்தாகும். ஆக்சிஜன் இரத்த சிவப்பணுக்களுக்குள் நுழைந்து, ஹீமோகுளோபினுடன் பிணைந்து, அதனை உடல் முழுவதும் கொண்டு செல்வதற்கு துணைபுரிகிறது. ஹீமோகுளோபினில் இரண்டு முக்கிய பாகங்கள் உள்ளன: அவை, இரும்புச்சத்து நிறைந்த கட்டமைப்புகளான ஹீம் மூலக்கூறுகள் மற்றும் ஹீமைச் சுற்றி அதனைப் பாதுகாக்கும் புரதச்சத்தான குளோபின் மூலக்கூறுகள் ஆகியவையாகும்.
இரும்புச் சத்துக்கும் ஹீமோகுளோபினுக்கும் இடையில் உள்ள உறவு முறை என்ன?
இரும்புச்சத்து என்பது ஹீமோகுளோபி னை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் கட்டுமானத் தொகுதியாகும். சிவப்பணுக்கள் தொடர்ந்து இரத்தத்தில் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த செயல்முறையில் பழைய சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து மீண்டும் சிவப்பணுக்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரும்புச்சத்து மறுசுழற்சி இருந்தபோதிலும், நமது உணவிலிருந்து நம் உடலுக்கு இரும்புச் சத்தின் தேவை தொடர்ந்து உள்ளது.
உங்கள் இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் இரும்புச் சத்தில் 70% ஹீமோகுளோபினில் உள்ளது. உங்கள் உடலில் காணப்படும் இரும்புச் சத்தில் சுமார் 6% சில புரதச் சத்துக்களின் ஒரு அங்கமாகும். இவை சுவாசம் மற்றும் வளர்சிதை மாற்றம் போன்ற பல உயிரணு அல்லது திசுச் செயல்பாடுகளுக்கு அவசியமாகும். திறம்பட்ட மற்றும் நிலையான நோயெதிர்ப்பு சக்திக்கும் இரும்புச்சத்து அவசியமாகும்.
நமது உடலில் உள்ள இரும்புச் சத்தில் சுமார் 25% ஃபெர்ரிட்டின் வடிவத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. உங்கள் உடலிலுள்ள அனைத்து உயிரணுக்கள், திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டத்தின் மூலம் இந்தப் புரதச்சத்துச் சுழற்சிச் செய்யப்படுகிறது. உடலில் இரும்புச் சத்தின் அளவு குறைவாக இருக்கும்போது, ஹீமோகுளோபின் அளவும் குறைகிறது. உடலில் இரும்புச் சத்தின் அளவு குறையும்போது, அது இரும்புச் சத்துச் சிதைவு என்று அழைக்கப்படுகிறது. இது இரும்புச் சத்துக் குறைபாடுள்ள இரத்த சிவப்பணு உருவாக்கத்திற்கு உடனே வழிவகுக்கிறது. மனித உடலில் ஏற்படும் இரும்புச் சத்துச் சிதைவின் கடைசிக் கட்டம் இரும்புச் சத்துக் குறைபாடு என்றும், மருத்துவ ரீதியாக இது இரத்தச்சோகை என்றும் அழைக்கப்படுகிறது.
ஆரோக்கியமான ஹீமோகுளோபின் அளவைப் பராமரிப்பதற்கு, ஒருவர் ஒரு நாளைக்குக் குறைந்தது 1.8 மி.கி. இரும்புச் சத்தை உணவில் உட்கொள்ள வேண்டும். பசுக்கன்று இறைச்சி, பன்றி இறைச்சி, வான்கோழி இறைச்சி, கோழி இறைச்சி, கல்லீரல், முதலியவை இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களாகும். கீரை, கருப்பட்டி, பேரீச்சம்பழம், உருளைக்கிழங்கு, பச்சை பீன்ஸ், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளிலிருந்தும் அதிக அளவு இரும்புச்சத்தை நீங்கள் பெறலாம்.
ஹீமோகுளோபினின் சராசரி அளவு என்ன?
வயது வந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு உள்ள ஹீமோகுளோபினின் சராசரி அளவு வேறுபடுகிறது. ஒருவரின் வயதைப் பொறுத்தும் இந்த அளவு மாறுபடுகிறது.
சோதனை முடிவுகளில் குறைந்த அளவு ஹீமோகுளோபின் உள்ளது என்பதன் பொருள் என்ன?
உங்கள் ஹீமோகுளோபின் அளவு சராசரி வரம்பைவிடக் குறைவாக இருந்தால், உங்களுக்கு இரத்தச் சோகை இருப்பதாக மருத்துவர்கள் பொதுவாகக் கூறுவார்கள். இதற்குக் காரணமான சில காரணிகள் உள்ளன, அவை பின்வருமாறு:
சராசரி அளவை விட ஹீமோகுளோபின் அதிகம் உள்ள சோதனை முடிவின் பொருள் என்ன?
உங்களுக்கு அதிக ஹீமோகுளோபின் இருந்தால், அது பின்வருவனவற்றின் காரணமாக இருக்கலாம்:
குறைந்த அளவிலான ஹீமோகுளோபினின் அறிகுறிகள் என்ன?
குறைந்த அளவிலான ஹீமோகுளோபினின் அறிகுறிகளில் சில பின்வருமாறு:
அதிக அளவிலான ஹீமோகுளோபினின் அறிகுறிகள் என்ன?
அதிக அளவிலான ஹீமோகுளோபினின் அறிகுறிகள் பின்வருமாறு:
மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
முன்பதிவு செய்வதற்கு 1860-500-1066-ஐ அழைக்கவும்
இரத்த ஹீமோகுளோபின் சோதனை எவ்வாறு செய்யப்படுகிறது?
உங்கள் இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, அது ஆய்வகத்திற்குச் சோதனைக்காக அனுப்பப்படுகிறது. இதில் சிக்கலான நடைமுறை எதுவும் இல்லை.
முடிவாக
உங்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை இரத்த ஹீமோகுளோபின் சோதனை கண்டுபிடிக்கிறது. ஹீமோகுளோபினின் அளவு மூலம் உங்கள் உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவு சரியாக உள்ளதா என்பதையும் நீங்கள் அறிய முடியும். உங்கள் சோதனை முடிவுகள் வந்தவுடன், அதனை சராசரி அளவிற்குக் கொண்டுவருவதற்கான சரியான உணவுமுறை மற்றும்/அல்லது மருந்துகளை மருத்துவர் உங்களுக்குப் பரிந்துரைக்க முடியும்.