Verified By Apollo Pulmonologist March 30, 2023
3601TrueNat என்பது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு காசநோயைக் (TB) கண்டறிவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய சாதனமாகும். இது சிப் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பேட்டரி மூலம் இயங்குகின்ற சாதனம். இந்த சாதனத்தைக் கோவாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் உருவாக்கியது. சளி மாதிரியில் உள்ள TB பாக்டீரியாவை ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் கண்டறிவதற்கான செலவு குறைந்த வழி தான் இந்த TrueNat சாதனம்.
இச்சாதனம் 100% துல்லியமான முடிவுகளை வழங்கியதால், உலக சுகாதார நிறுவனம் காசநோய் பாக்டீரியாவைக் கண்டறியும் சோதனைக்கு இதைப் பயன்படுத்த ஒப்புதலளித்தது. PCR சோதனையின் மினியேச்சர்(சிறு) வடிவமாகக் கருதப்படும் இதை, ஒரு சிறிய அமைப்புக்குள் சுலபமாகப் பயன்படுத்த முடியும். மேலும், இதை இயக்க குறைந்தபட்ச அளவிலான பயிற்சி போதுமானது.
COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தும் சோதனைகளுக்கு, TrueNat சாதனங்களைப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
முன்பு காசநோயைக் (TB) கண்டறியப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சாதனங்கள், தற்போதைய பெருந்தொற்று காலத்தில், நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் முதல்நிலைச் சோதனைகளில் பயன்படுத்தப்படுகிறது.
COVID-19 நோய்த்தொற்றுக்கு TrueNat சோதனை
COVID-19 வைரஸைக் கண்டறிவதற்கு, இந்நிறுவனம் இந்த சோதனைத் தொகுப்பில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது PPE (தனிநபர் காப்பு உபகரணங்கள்) அணிந்துள்ள, பயிற்சிபெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் தொண்டை மற்றும் நாசிப் பகுதியிலிருந்து சளி மாதிரியைச் சேகரிக்கின்றனர் (ஸ்வாப்).
COVID-19 தொற்றை ஏற்படுத்துகின்ற SARS-CoV-2 வைரஸில் DNA இருக்காது, RNA மூலக்கூறு மட்டுமே இருக்கும். சோதனையில் மரபணு கண்டறியப்படும் முன்பாக, RT-PCR-இல் உள்ள RT (ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன்) (reverse transcription) செயல்முறையின் மூலம் RNA மூலக்கூறானது DNA மூலக்கூறாக மாற்றப்படுகிறது.
TrueNat என்பது சிப் தொழில்நுட்ப அடிப்படையில் பேட்டரி மூலம் இயங்குகின்ற RT-PCR சாதனமாகும். முன்பாக, COVID-19 தொற்றை ஏற்படுத்துகின்ற SARS-CoV-2 வைரஸில் உள்ள E-மரபணுவை மட்டுமே இந்தச் சாதனம் கண்டறிந்தது. வைரஸைச் சுற்றிலும் ஒரு கோள வடிவ உறையை உருவாக்கிக்கொள்ள இந்த E-மரபணு உதவுகிறது. ஆனால், வைரஸின் RNA-இல் உள்ள RdRp என்சைமைக் கண்டறியும் வகையில் இச்சாதனம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் COVID-19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதிப்படுத்தும் சோதனைகளாக இதைப் பயன்படுத்தலாம் என்று ICMR ஒப்புதலளித்துள்ளது.
சோதனை செய்ய ஆகும் நேரம்
DNA மூலக்கூறைப் பிரித்தெடுக்க 25 நிமிடங்களும், வைரஸைக் கண்டறிய 35 நிமிடங்களும் ஆகும். எனவே, TB சோதனைக்கு மொத்தம் ஒரு மணிநேரம் தேவை. ரிஃபாம்பிஸின் (Rifampicin) கண்டறியக் கூடுதலாக ஒரு மணிநேரம் ஆகும். Covid-19 சோதனையில் முதல் நிலை சோதனை, உறுதிப்படுத்தல் என இரண்டு நிலைப் படிகள் உள்ளன. ஆதலால், COVID-19 வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறிய 2 மணிநேரம் ஆகும்.
இந்தச் சாதனம் 45 வரையிலான மாதிரிகளை சோதனை செய்து COVID-19, HIV, TB உள்ளிட்ட பல்வேறு நோய்களை நான்கு-வழிமுறையில் கண்டறியும் திறன் கொண்டது.
TrueNat சோதனை முடிவுகள்
E-மரபணு இருப்பதை உறுதிசெய்வதற்காக ஆரம்பநிலைச் சோதனை மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்ட COVID – 19 அறிகுறிகள் உள்ள நோயாளிகளின் மாதிரிகளில், வைரஸ் தொற்று உள்ளது என்று கண்டறியப்பட்ட மாதிரிகள் மட்டும் RdRp மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப்படும். இம்மாதிரிகளில் வைரஸ் தொற்று உள்ளது என்று முடிவுகள் காண்பித்தால், அந்த நோயாளிகளுக்கு COVID-19 நோய்த்தொற்று உள்ளது என்று கருதப்படும். COVID-19 இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்ற நபர்களுக்கு, அந்நோய்த்தொற்று உள்ளதை உறுதிப்படுத்தும் இறுதிச் சோதனையாக TrueNat சோதனைகள் கருதப்படுகின்றன.
சளி மாதிரி நுண்ணோக்கி ஆய்வுடன் ஒப்பிடும்போது TrueNat சோதனைகள் 99% துல்லியமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. TrueNat MTB மதிப்பீட்டில் TB-க்கான உணர்திறன் 89% ஆக இருந்தது. TrueNat முடிவுகள் Xpert நோயறிதல் சோதனை முடிவுகளுடன் ஒப்பிடப்பட்டபோது, இவை அதிக உணர்திறனும் துல்லியமும் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டது.
ஸ்மியர் மைக்ரோஸ்கோப்பி முறையுடன் ஒப்பிடுகையில் TrueNat சோதனைகளில் TB-ஐக் கண்டறியும் விகிதம் 30% அதிகமாக இருந்தது. இந்தச் சோதனையால் காசநோய் கண்டறிதல் அதிகமானதோடு, நோய் ஏற்படுதலும் பரவுதலும் குறைந்துள்ளது. Genexpert சோதனை போலவே Covid-19 வைரசைக் கண்டறியச் செய்யப்படும் TrueNat சோதனைகள் அதிக சதவீதத்திலான துல்லியமும் தெளிவும் கொண்டுள்ளவை.
கருத்து
இந்தியாவில் COVID-19 அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு, வைரஸ் நோய்த்தொற்று இருப்பதைக் கண்டறியவும் உறுதிப்படுத்தவும் செய்யப்படும், விரிவான சோதனையே TrueNat சோதனையாகும். COVID-19 நோய்த்தொற்று இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு, மாற்றம் செய்யப்பட்ட TrueNat சோதனைச் சாதனங்களைப் பயன்படுத்த ICMR ஒப்புதல் அளித்துள்ளது.
TrueNat பேட்டரியில் இயங்குகிறது. விலை குறைவானது. RT-PCR சோதனைகளை விடக் குறைந்த நேரத்தில் துல்லியமான முடிவுகளை வழங்குகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளைச் சோதனை செய்வதற்கும், நகரும் சோதனை மையங்களை உருவாக்குவதற்கும் இவற்றைப் பயன்படுத்தலாம். இச்சோதனைத் தொகுப்புகள் மூலம் மாதிரிகளைச் சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் குறைந்த அளவிலான பயிற்சியேத் தேவைப்படும். TrueNat சோதனையை ICMR அங்கீகரிப்பதற்கு இவையே முக்கியக் காரணங்கள் ஆகும்.
பொதுவான கேள்விகள்:
TrueNat சாதனம் மட்டுமே தொலைதூர மாவட்டங்களுக்கு எளிதில் கொண்டு செல்ல முடியும். TrueNat சாதனத்தின் விலை ரூ.1300 மட்டுமே – இது பெரிய RT-PCR சோதனைச் சாதனைகளை விட விலை மலிவானது.
சோதனை மாதிரியில் உள்ள வைரஸைக் கண்டறிவதற்குத் தேவையான அனைத்து கணக்கீடுகளும் இந்தச் சிப்பில் ஏற்றப்பட்டுள்ளன.
முழுதும் சார்ஜ் செய்த பிறகு சாதனத்தை 10 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். TrueNat சாதனங்களை 24 மணிநேரமும் இயக்கலாம்.
எட்டு மணிநேர ஷிஃப்ட்டில் TrueNat மூலம் 45 சோதனைகளைச் செய்து முடிக்கலாம்.
TB-ஐ உறுதிப்படுத்துவதற்கு மாண்டாக்ஸ் டியூபர்கியூலின் (Mantoux Tuberculin) சருமச் சோதனை, AFB ஸ்மியர் மைக்ரோஸ்கோப்பி (smear microscopy) சோதனை, டைரக்ட் ஸ்மியர் மைக்ரோஸ்கோப்பி (Direct sputum smear microscopy) சோதனை, TB இரத்தப் பரிசோதனை, TrueNat மூலக்கூறு சோதனை ஆகிய சோதனைகள் உள்ளன. இவற்றில் அதிகத் துல்லியம் கொண்டது TrueNat சோதனையாகும்.
TB, HIV, Covid-19 ஆகிய நோய்களை TrueNat சோதனையின் மூலம் கண்டறியலாம். இயந்திரத்தில் அந்தந்த நோய்க்கான நோய் விவரங்களை சரியாக ஏற்றிவிட்டால், ஒரே சமயத்தில் பல்வேறு நோய்களை TrueNat நான்கு-வழிமுறை இயந்திரம் மூலம் நாம் எளிதில் கண்டறியலாம்.
The content is verified and reviewd by experienced practicing Pulmonologist to ensure that the information provided is current, accurate and above all, patient-focused