Verified By Apollo General Physician June 7, 2024
10738தைராய்டு என்பது கழுத்தின் அடிப்பகுதியில் அமைந்துள்ள சுரப்பி ஆகும். தைராய்டு முடிச்சுகள் என்பது தைராய்டு சுரப்பியில் வளரும் ஒரு அசாதாரண வளர்ச்சி அல்லது கட்டி ஆகும். இவை திரவத்தால் நிரப்பப்பட்டவை அல்லது திடமானவை, அவற்றில் பெரும்பாலானவை கடுமையான அல்லது தீவிர அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை. இந்த முடிச்சுகளில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே புற்றுநோயாக மாறுகிறது மற்றும் இதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
வழக்கமான ஸ்கேன் அல்லது பரிசோதனையின் போது மருத்துவர் பெரும்பாலும் தைராய்டு முடிச்சுகளை கவனிக்கிறார். ஆனால் சில வகையான தைராய்டு முடிச்சுகள் பெரிதாகி விழுங்குவதையோ அல்லது சுவாசிப்பதையோ கடினமாக்குகிறது.
பெரும்பாலான தைராய்டு முடிச்சுகளால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆனால் சில முடிச்சுகள் பின்வரும் அறிகுறிகளைக் காட்டலாம்:
இது தவிர, சில தைராய்டு முடிச்சுகள் தைராக்ஸின் என்ற ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்வதால், இது போன்ற பிற அறிகுறிகளை உருவாக்குகிறது:
உங்களுக்கு விழுங்குவதில் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உங்கள் மருத்துவர் உங்கள் கழுத்து வீக்கத்தை பரிசோதிப்பார். திடீரென்று விவரிக்க முடியாத எடை இழப்பு, அதிகரித்த இதயத் துடிப்பு, தூங்குவதில் சிரமம், தசைகளில் பலவீனம் மற்றும் பதட்டம் போன்றவற்றைக் கண்டால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும். நீங்கள் அதிக குளிர்ச்சியை உணர்ந்தால், வறண்ட சருமம் மற்றும் நினைவாற்றல் பிரச்சனைகளை அனுபவித்தால் உங்கள் மருத்துவரை அணுகவும். இந்த அறிகுறிகள் பொதுவாக தைராய்டு சுரப்பி மூலம் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தி பற்றாக்குறையை குறிக்கின்றன.
சந்திப்பை முன்பதிவு செய்ய 1860-500-1066 ஐ அழைக்கவும்
தைராய்டு முடிச்சுகள் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?
தைராய்டு முடிச்சுகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த காரணங்களில் சில:
1. தைராய்டு திசு வளர்ச்சி: அடினோமா எனப்படும் தைராய்டு திசுக்களின் அதிகப்படியான வளர்ச்சி இதன் காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அடினோமா என்பது பொதுவாக புற்றுநோயாக இருக்காது மற்றும் இது கடுமையான அறிகுறிகள் தோன்றாத வரை கடுமையானதாக கருதப்படாது.
2 .நீர்க்கட்டிகள்: தைராய்டு சுரப்பியில் திரவம் நிரப்பப்பட்ட துவாரங்கள் அல்லது நீர்க்கட்டிகள் சிதைந்து வரும் தைராய்டு அடினோமாக்களிலிருந்து உருவாகின்றன. மேலும், இவற்றில் திட மற்றும் திரவ கூறுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை புற்றுநோய் அல்லாதவை என்றாலும், சில நேரங்களில் அவை புற்றுநோய் கூறுகளைக் கொண்டிருக்கின்றன.
3. நாள்பட்ட அழற்சி: தைராய்டு சுரப்பியின் வீக்கம் மற்றும் விரிவாக்கப்பட்ட முடிச்சுகளின் வீக்கத்தை விளைவிக்கும் தைராய்டு கோளாறு ஹாஷிமோடோ நோய் எனப்படுகிறது. இது பெரும்பாலும் ஹைப்போ தைராய்டிசத்துடன் தொடர்புடையது.
4. தைராய்டு புற்றுநோய்: வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒரு பெரிய கடினமான முடிச்சுக்கு மருத்துவரின் உடனடி ஆலோசனை தேவைப்படுகிறது. இத்தகைய முடிச்சுகள் பொதுவாக புற்றுநோயாகும் மற்றும் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.
5. முன்கழுத்துக்கழலை: முன்கழுத்துக்கழலை பொதுவாக விரிவாக்கப்பட்ட தைராய்டு என்று குறிப்பிடப்படுகிறது, ஆனால் பல முடிச்சுகளையுடைய முன்கழுத்துக்கழலை சில தனித்துவமான முடிச்சுகளைக் கொண்டுள்ளது. இத்தகைய முன்கழுத்துக்கழலைக்கான காரணம் தெரியவில்லை.
6. அயோடின் குறைபாடு: சில சந்தர்ப்பங்களில், அயோடின் குறைபாடு தைராய்டு முடிச்சுகளையும் ஏற்படுத்துகிறது.
தைராய்டு முடிச்சுகளை எவ்வாறு கண்டறிவது?
நோயறிதலை உறுதிப்படுத்த, உங்கள் மருத்துவர் பின்வரும் சோதனைகள் மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்வார்:
1. உடல் பரிசோதனை: உங்கள் மருத்துவர் உங்கள் விழுங்குதல் மற்றும் சுவாசத்தை மதிப்பீடு செய்ய தைராய்டு சுரப்பியை பரிசோதிப்பார்கள். ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசத்தின் மற்ற அறிகுறிகளையும் அவர் பரிசோதிப்பார்.
2. தைராய்டு செயல்பாடு சோதனைகள்: இந்த இரத்த பரிசோதனைகள் உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் அல்லது ஹைப்பர் தைராய்டிசம் உள்ளதா என்பதை வெளிப்படுத்துகிறது.
3. ஸ்கேன்: தைராய்டு முடிச்சுகளை மதிப்பிட உதவும் தைராய்டு ஸ்கேனையும் உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். கையின் நரம்பு வழியாக செலுத்தப்படும் அயோடின் கதிரியக்க ஐசோடோப்பைப் பயன்படுத்தி இது செய்யப்படுகிறது.
4. அல்ட்ராசவுண்ட்: இந்த நுட்பம் தைராய்டு சுரப்பியின் படத்தை உருவாக்க அதிக அதிர்வெண் ஒலியை உருவாக்குகிறது. இது தைராய்டு முடிச்சுகள் பற்றிய தகவலை வழங்குகிறது மற்றும் உங்கள் மருத்துவர் சிகிச்சையை தீர்மானிக்க உதவுகிறது.
5. நுண்ணிய ஊசி ஆஸ்பிரேஷன் பயாப்ஸி: உங்கள் மருத்துவர் புற்றுநோய் வளர்ச்சியை பகுப்பாய்வு செய்ய மிக மெல்லிய ஊசிகளைப் பயன்படுத்தி ஒரு சிறிய மாதிரியை மீட்டெடுப்பார். இது தைராய்டு முடிச்சுயானது புற்றுநோயா என்பதை தீர்மானிக்க உதவுகிறது.
தைராய்டு முடிச்சுகளுக்கு என்னென்ன சிகிச்சை திட்டங்கள் உள்ளன?
தைராய்டு முடிச்சுகளுக்கான சிகிச்சைத் திட்டம் உங்களிடம் உள்ள முடிச்சுகளின் வகையைப் பொறுத்தது.
தீங்கற்ற முடிச்சுகள்
தைராய்டு முடிச்சுகள் புற்றுநோயாக இல்லை என்றால், பின்வருவனவற்றை உங்கள் மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார்:
1. காத்திருப்பு: உங்கள் முடிச்சுகளின் பயாப்ஸி முடிவுகள் அது புற்றுநோயற்றது என அறிவித்தால், உங்கள் மருத்துவர் முடிச்சுகளை அவதானிக்கும்படியும், அது பெரிதாக இருந்தால் மருத்துவரிடம் தெரிவிக்குமாறும் மட்டுமே கேட்பார். வளர்ச்சியைப் பொறுத்து, உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவையா என்பதை இது தீர்மானிக்கும்.
2. தைராய்டு ஹார்மோன் சிகிச்சை: தைராய்டு செயல்பாடு சோதனைகள் உங்கள் தைராய்டு போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யவில்லை என்று காட்டினால், உங்கள் மருத்துவர் உங்களை தைராய்டு ஹார்மோன் சிகிச்சைக்கு உட்படுத்துவார்.
அறுவை சிகிச்சை
சில நேரங்களில், புற்றுநோய் அல்லாத தைராய்டு முடிச்சுகள் சுவாசிக்க அல்லது விழுங்குவதை கடினமாக்கினால் அறுவை சிகிச்சை தேவைப்படும். இந்த தைராய்டு முடிச்சுகள் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது.
ஹைப்பர் தைராய்டிசம்
உங்கள் தைராய்டு அதிகப்படியான ஹார்மோன்களை உற்பத்தி செய்தால், பின்வருவனவற்றில் ஒன்றை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார்.
1. கதிரியக்க அயோடின்: இந்த சிகிச்சையில், அயோடின் ஒரு திரவமாக அல்லது மாத்திரையாக உட்கொள்ளப்படுகிறது. கதிரியக்க அயோடின் முடிச்சுகளை சுருங்கச் செய்வதால் சில மாதங்களுக்குள் அறிகுறிகள் குறையும்.
2. தைராய்டு எதிர்ப்பு மருந்துகள்: ஹைப்பர் தைராய்டிசத்தைக் குறைக்க உங்கள் மருத்துவர் தைராய்டு எதிர்ப்பு மருந்துகளையும் பரிந்துரைக்கலாம். இது பொதுவாக நீண்ட காலத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது.
3. அறுவை சிகிச்சை: கதிரியக்க அயோடின் மற்றும் தைராய்டு எதிர்ப்பு மருந்துகள் சிக்கலைத் தீர்க்கவில்லை என்றால், உங்கள் மருத்துவர் உறுப்பை அறுவைசிகிச்சை செய்து பிரித்தெடுப்பதை பரிந்துரைப்பார்.
புற்றுநோய்க்குரிய தைராய்டு முடிச்சுகள்
புற்றுநோய் தைராய்டு முடிச்சுகளுக்கு சிகிச்சையளிக்க பொதுவாக அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
1. கவனிப்பு: மிகச் சிறிய புற்றுநோய்கள் மிக மெதுவாக வளரும் மற்றும் பெரியதாக வளரும் அபாயம் குறைவு; எனவே, அசாதாரண வளர்ச்சிக்காக உங்கள் தைராய்டு சுரப்பியை தொடர்ந்து கண்காணிக்குமாறு உங்கள் மருத்துவர் அறிவுறுத்துவார்.
2. அறுவை சிகிச்சை: உங்கள் மருத்துவர் தைராய்டை ஒரு பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அகற்றலாம்.. வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தைராய்டு ஹார்மோன் மாற்று சிகிச்சை தேவைப்படும்.
3. ஆல்கஹால் நீக்கம்: இந்த சிகிச்சை முறையில், சிறிய அளவிலான ஆல்கஹால் முடிச்சுக்குள் செலுத்தப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பல அமர்வுகள் தேவைப்படுகின்றன.
முடிவுரை
தைராய்டு முடிச்சுகள் பெரும்பாலும் புற்றுநோயற்றவை. இவை சுவாசம் மற்றும் விழுங்குதல் ஆகியவற்றுக்கு இடையூறு விளைவித்தால் மேலும் கவலையளிக்கும். தைராய்டு முடிச்சுகளை ஏற்படுத்தும் முதன்மையான காரணிகள் விவரிக்க முடியாத வளர்ச்சிகள், நீர்க்கட்டிகள் மற்றும் அயோடின் குறைபாடு ஆகும். தைராய்டு சுரப்பியில் ஏதேனும் அசாதாரண மாற்றம் ஏற்பட்டால் நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்)
மூலக்கூறு சோதனை என்றால் என்ன?
சில வகையான தைராய்டு முடிச்சுகளுக்கு, உறுதியான நோயறிதலைச் செய்வது கடினம், மேலும் தகவலை வழங்க மூலக்கூறு சோதனை பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சோதனையானது புற்றுநோய் அல்லது புற்றுநோய் அல்லாத வளர்ச்சியை அறிவிக்கும் உயிரணுக்களின் வகை மற்றும் பண்புகளை விவரிக்கிறது.
கொலாய்டு முடிச்சு என்றால் என்ன?
கொலாய்டு முடிச்சு என்பது தைராய்டில் இருந்து வளரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முடிச்சுகள் ஆகும். இவை பொதுவாக தீங்கற்றவை, பெரிதாக வளரும் ஆனால் தைராய்டை அதிகப்படுத்தாது.
தைராய்டு முடிச்சுகள் ஏற்படுவதை நான் எவ்வாறு தடுப்பது?
பொதுவாக, தைராய்டு முடிச்சுகள் உருவாகாமல் தடுக்க எந்த வழியும் இல்லை. உங்களுக்கு தைராய்டு முடிச்சுகள் இருப்பது கண்டறியப்பட்டால், சிகிச்சைத் திட்டத்தின் மூலம் உங்கள் மருத்துவர் உங்களுக்கு வழிகாட்டுவார். நீங்கள் எப்போதும் உங்கள் முடிச்சுகளை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
Our expert general medicine specialists verify the clinical accuracy of the content to deliver the most trusted source of information makine management of health an empowering experience
June 7, 2024
June 7, 2024
January 2, 2024